Home Blog

கண் வைத்தியர் தனியார் விடுதியில் சடலமாக மீட்பு!

0

அம்பாறை பொது வைத்தியசாலையின் கண் பிரிவில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் அவர் தங்கியிருந்த தனியார் விடுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அம்பாறை பொலிஸ் நிலையத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த மருத்துவர், அவர் பணிபுரியும் வைத்தியசாலைக்கு திட்டமிட்டபடி வராததால் வைத்தியசாலையைச் சேர்ந்தவர்கள் அவரது தொலைபேசிக்கு பலமுறை அழைத்தனர். இருப்பினும் அவரிடமிருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. இதனையடுத்து வைத்தியசாலையைச் சேர்ந்த இரு தாதிகள், குறித்த டாக்டர் தங்கியிருந்த விடுதிக்குச் சென்றுள்ளனர்.

அதன்போது குறித்த வைத்தியர் படுக்கையில் உறங்கிக் கொண்டிருக்கும் நிலையில் காணப்பட்டுள்ளார். பின்னர் அம்பியூலன்ஸை வரவழைத்து அதன் மூலம் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். வைத்தியசாலையில் அவரைப் பரிசீலித்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி மட்டுவில் பகுதியில் இளைஞர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு !

0

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் இன்று அதிகாலை (18 -11-2023) சாவகச்சேரி மட்டுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வீட்டில் தனிமையில் இருந்த குறித்த இளைஞர் இன்று அதிகாலை தூட்கிட்டு உயிரிழந்துள்ளார்

காலை சகோதரி வீட்டுக்கு சென்று பார்த்தபோது தூக்கிட்டு உயிரிழந்தநிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்

31 வயதான சந்திரசேகரம் கஜனன் என்ற இளைஞரே தனது வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.

இந்த நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டு சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டார்.

பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

வவுனியா விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி!!

0

வவுனியா எ9 வீதி சாந்தசோலை சந்தியில் இன்று இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பரிதாப சாவடைந்துள்ளார்.

குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்…

இன்று மாலை 2 மணியளவில் ஓமந்தை பகுதியில் இருந்து வவுனியா நோக்கி குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.

இதன்போது எதி்ரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் பயணித்துகொண்டிருந்த முதியவர் ஒருவர் சாந்தசோலைப்பகுதிக்குள் திரும்ப முற்ப்பட்டபோது குறித்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் காயமடைந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் குறித்த இளைஞர் சாவடைந்துள்ளதுடன் முதியவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

27 வயதான அக்கராயன் பகுதியில் பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவில் பணிபுரியும் திசாநாயக்கா என்பவரே சாவடைந்துள்ளார்

விபத்து தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

இரட்டை குழந்தைகளை பிரசவிக்க தயாராக இருந்த இளம் கற்பிணித்தாயும் ஒரு குழந்தையும் உயிரிழப்பு!

0

இரட்டை குழந்தைகளை பிரசவிக்க தயாராக இருந்த எட்டுமாத கற்பிணித்தாயும் பிள்ளை ஒன்றும் உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று (16) திருகோணமலை வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

மூதூர், இக்பால் வீதியைச் சேர்ந்த இரட்டை குழந்தைகளை பிரசவிக்க தயாராக இருந்த எட்டுமாத இளம் கற்பிணித்தாய் ஒருவர் நேற்று (16) மாதாந்த மகப்பேற்று பரிசோதனைக்காக திருகோணமலை தனியார் வைத்தியசாலை ஒன்றில் ஸ்கான் பரிசோதனையை மேற்கொண்டபோது ஒரு குழந்தை உயிரிழந்துள்ளதாக வைத்தியர் தெரிவித்ததுடன் அவரின் பணிப்புரைக்கு அமைவாக குறித்த தாய் வைத்தியசாலைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டபோதிலும் வழியில் உயர் குருதி அழுத்தம் காரணமாக மயக்கம் அடைந்துள்ளார்.

பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சத்திர சிகிச்சை மேற்கொண்டபோதிலும் குறித்த தாயும் உயிரிழந்ததுடன் ஒரு குழந்தை மட்டும் காப்பாற்றப்பட்டு விசேட சிசு பராமரிப்புப் பிரிவில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த தாயின் மரணத்திற்கான முழுமையான காரணம் இன்னும் தெரியவராத நிலையில் உயர் குருதி அழுத்தம் காரணமாக இருக்கலாம் எனவும் தெரிய வருகின்றது.

திருகோணமலையில் மகப்பேற்று வைத்தியர்களின் பற்றாக்குறை நிலவுவதாகவும் அண்மைக்காலமாக சிறந்த மருத்துவ ஆலோசனை கிடைக்காமையினால் சட்டரீதியான கருக்கலைப்பு, சிசுக்களின் உயிரிழப்பு சம்பவங்களும் அதிகமாக இடம்பெற்று வருவதாகவும் சிறந்த வைத்திய சேவையினை பெற்றுக் கொள்ள முடியாதுள்ளதாகவும் பல தாய்மார்கள் கவலை வெளியிடுகின்றனர்.

முல்லையில் தொடரும் ஆசிரியர் துஸ்பிரயோகங்கள்!! மேலும் ஒருவர் மாட்டினார்

0

முல்லைத்தீவு நெட்டாங்கண்டல் பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பாண்டியன்குளம் பகுதியல் தனியார் வகுப்பு நடத்தி வரும் வாத்தி ஒருவர் ஆண்மாணவர்களுடன் நீண்டகாலமாக ஓரின பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டு அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில,

பாண்டியன்குளம் பிரதேசத்தில் கணிதபாடத்தில் சிறப்புதேர்ச்சி பெற்ற வாத்தி ஒருவர் மாணவர்கள் மத்தியில் கணிதபாடம் கற்பிப்பதில் சிறப்பான பெயர் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் இவர் மாணவர்களுக்கு தனியார் கல்வி நிலையம் வைத்தும் பிரத்தியேக வகுப்புக்கள் நடத்தியும் கல்வி கற்று வந்துள்ளார்.

இவ்வாறு கல்வி கற்றுவரும் ஆண் மாணவர்களை தன் வலைக்குள் வீழ்த்தி ஓரின பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளார்.

இந்த சம்பவம் கடந்த ஒரு ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ளது.

இது தொடர்பில் பொலீஸ் நிலையத்தில் முறையிடப்பட்ட போதும் பிரதேச செயலத்தில் முறையிடப்பட்ட போதும் உரிய நேரத்தில் சரியான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என தெரியவந்துள்ளது.

குறித்த தனியார் வாத்தியாரால் ஆறு ஆண் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார், கடந்த ஒரு ஆண்டு காலமாக இந்த சம்பவம் இடம்பெற்று வந்துள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 13.11.23 அன்று குற்றஞ்சாட்டப்பட்ட வாத்தியாரால் பாதிக்கப்பட்ட மாணவன் ஒருவன் முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவன் பாலியல் துஸ்பிரயோகம் செய்தமை தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த தனியார் வாத்தி நெட்டாங்கண்டல் பொலீசாரால் கைது செய்யப்பட்டு அன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவரை விளக்கமறியலில் வைக்க மன்ற உத்தரவிட்டுள்ளதுடன் இது தொடர்பிலான சட்டவைத்திய பரிசோதனை மற்றும் முதற்கட்ட விசாரணைகள் என்பன தற்போது இடம்பெற்று வருவதாக அறியக்கிடைத்துள்ளது.

இதேவேளை பாண்டியன் குளத்தில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் உயர்தர மாணவிகளுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய குற்றச்சாட்டில் கல்விசார் திணைக்களத்தினால் விசாரணை நடத்தப்பட்டு அயல் பாடசாலை ஒன்றிற்கு இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் மாணவர்கள் மத்தியில் பரவலாக இடம்பெற்று வருகின்றமையும் பொலீசார் மற்றும் திணைக்களம் சார் அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் எடுக்கதவறியமை பலர் மத்தியில் விசனத்தினை ஏற்படுத்தியுள்ளது.

தாயின் இரண்டாவது கணவனால் கர்ப்பிணியான சிறுமியின் கருவை கலைக்க உதவிய பாமசி உரிமையாளர் உட்பட மூவர் கைது

0

முல்லைத்தீவு குமுழமுனைப்பகுதியில் தாயின் இரண்டாவது கணவன் 13 வயது சிறுமியிடன் தகாத உறவு கொண்ட காரணத்தினால் சிறுமி கர்ப்பம் தரித்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு முன்னால் உள்ள மருந்தகம் ஒன்றில் சட்டவிரோத கருக்கலைப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் கடந்த ஆண்டு இறுதிப்பகுதியில் இடம்பெற்ற நிலையில்,

சம்பவம் தொடர்பில் 13.11.23 அன்று முல்லைத்தீவு பொலீசில் பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்களால் தொடரப்பட்ட முறைப்பாட்டினை தொடர்ந்து பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.

இந்த நிலையில் சிறுமியின் கருத்தரிப்பிற்கு காரணமாக இருந்த வளர்ப்பு தந்தை உடந்தையாக இருந்த தாயார், மற்றும் கருக்கலைப்பினை மேற்கொண்ட தனியார் பாமசி உரிமையாளர் உள்ளிட்டவர்கள் முல்லைத்தீவு பொலீசார் கைது செய்துள்ளார்கள்.

கைதுசெய்யப்பட்ட நபர்களை மேற்கொண்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் பொலீசார் ஈடுபட்டுள்ளார்கள்.

LATEST POSTS