ஆறு வயது பாடசாலை மாணவி துஷ்பிரயோகம் – சிவில் பாதுகாப்பு குழுவின் முன்னாள் பிரதி செயலாளர் கைது

0

ஆறு வயது பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் மாவத்தகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிவில் பாதுகாப்பு குழுவின் முன்னாள் பிரதி செயலாளர் ஒருவரை மாவத்தகம பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகள் குழு இன்று (29) கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 68 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஆவார்.

இந்த சந்தேக நபர் பல வருடங்களாக தாம் வசிக்கும் பிரதேசத்தில் சிவில் பாதுகாப்பு குழுவின் பிரதி செயலாளர் பதவியை வகித்து அண்மையில் உத்தியோகபூர்வ தேர்தலில் அந்த பதவியை இழந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

சிறுமியின் தாயார் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சிறுமியிடம் வாக்குமூலம் பெறப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் பக்கத்து வீட்டில் வசிக்கும் சிறுமியின் வீட்டிற்கு வந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளான சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்ய பொலிஸார் ஏற்பாடு செய்து வருகின்றனர்

மேலும் அறிய  மன்னாரை உலுக்கிய 10 வயது சிறுமியின் மரணம்-சற்று முன் வெளியான மேலதிக தகவல்..! {படங்கள்}

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here