இலங்கையிலிருந்து கடத்தி செல்லப்பட்ட 15.5 கிலோ தங்கத்துடன் ஒருவர் கைது

0

தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே களிமண்குண்டு கடற்கரை பகுதியில் இலங்கையில் இருந்து 15.5 கிலோ தங்க கட்டிகளை கடத்தி சென்ற ஒருவர் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்ய்ப்பட்டுள்ளார்.

இலங்கையில் இருந்து படகில் தங்கம் கடத்தி வருவதாக இராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததையடுத்து களிமண்குண்டு கடற்கரை பகுதியில் மோட்டார் சைக்கிளில் பொதிகளுடன் சென்றவரை மடக்கி விசாரித்து பொதியை பார்த்த போது இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 15.5 கிலோ தங்க கட்டிகள் இருந்துள்ளன.

அவரிடம் விசாரித்த போது, பாம்பன் பகுதியை சேர்ந்த அஜ்மல்கான் மகன் சல்மான்கான் 26, என்பதும், தற்போது மண்டபம் அம்பலகார தெருவில் வசிப்பதும் தெரிய வந்துள்ளது. இவர் மண்டபம் பகுதியில் உள்ள டீ கடையில் தொழிலாளியாக உள்ளார். தங்க கட்டிகளை யாருக்காக கடத்தி வந்தார் என்பது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர். இந்த கடத்தலில் மேலும் 3 பேருக்கு தொடர்பு இருப்பது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது. அவர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட 15.5 கிலோ தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.5 கோடி (இந்திய ரூபா) என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இராமநாதபுரம் மாவட்டத்தில் தங்க கட்டிகள் கடல் வழியாக இலங்கையில் இருந்து தொடர்ந்து கடத்தி வரப்படுவது குறிப்பிடகத்தக்கது.

மேலும் அறிய  கோர விபத்து : பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் பலி..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here