இளம்பெண்ணை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்று வல்லுறவுக்குள்ளாக்க முயன்ற முதியவரிற்கு நேர்ந்த கதி

0

தனது வாடகை முச்சக்கர வண்டியில் பயணித்த இளம் பெண்ணை கடத்திச் சென்று வன்புணர்விற்குள்ளாக்க முயன்ற முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பெண்ணை வன்புணர ஆசைப்பட்ட முதியவரை, இளம்பெண் தள்ளிவிட்டுள்ளார். முதியவர் நிலத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்த விபரீத சம்பவம் பேருவளை பொலிஸ் பிரிவில் நடந்துள்ளது.

ஹெட்டிமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 35 வயதான இளம் பெண்ணொருவர் வாதுவ பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியொன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 26ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் பணிமுடிந்து பேருவளைக்கு வந்துள்ளார். அங்கிருந்து தனது வீடு செல்லவிருந்தார்.

இந்த சமயத்தில் தனக்கு அறிமுகமான முதியவர் ஒருவரின் முச்சக்கர வண்டியில் வீட்டுக்கு செல்ல முடிவெடுத்தார். இதற்காக ரூ.1000 பணம் தருமாறு முதியவர் கேட்டார். இருவருக்குள்ளும் முன்னரும் பணக்கொடுக்கல் வாங்கல் இருந்ததாக பொலிசார் கூறுகின்றனர்.

பெண்ணை ஏற்றிக்கொண்டு சென்ற முதியவர், பெண்ணின் வீடு இருந்த பகுதியை கடந்து சென்றார். தான் எதிர்ப்பு தெரிவித்த போதும், அதை பொருட்படுத்தாமல் சென்றதாக இளம்பெண் தெரிவித்துள்ளார்.

ஹெட்டிமுல்லைரிச்சன்ட் ஸ்டேட் பகுதியில் ஆட்களற்ற பகுதியில் முச்சக்கர வண்டியை நிறுத்தி விட்டு, தன்னுடன் சில்மிஷம் செய்ய முற்பட்டதாக கூறியுள்ளார்.தான் எதிர்ப்பு தெரிவித்த போதும், முதியவர் எல்லைமீற முற்பட்டதால் கைலப்பு உருவானதாகவும் தெரிவித்தார்.

இந்த இழுபறியின் போது இளம்பெண் தள்ளிவிட்டதில், முச்சக்கர வண்டி சாரதி மல்லாக்க விழுந்துள்ளார். தலை தாக்குப்பட்டு, நிலத்தில் துடிதுடித்துக் கொண்டிருந்துள்ளார்.

இதனால் அச்சமடைந்த இளம்பெண் தனது வீட்டுக்கு ஓடிச்சென்று, கணவனிடம் விடயத்தை கூறியுள்ளார். அவரையும் அழைத்துக்கொண்டு கணவர் பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்தனர்.

சம்பவ இடத்திற்கு பொலிசார் சென்துடன், 1990 நோயாளர் காவு வண்டியையும் அழைத்துச் சென்றனர். எனினும், பொலிசார் அங்கு சென்ற போது முதியவர் உயிரிழந்து காணப்பட்டார்.

உயிரிழந்தவர் பேருவளை, மொரகல்ல, இலக்கம் 110 இல் வசிக்கும் 63 வயதுடைய குடதுர நிமல் திலகசிறி டி சில்வா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பொலிசார் விசாரணைகளை நடத்தி வருகிறார்கள்.

மேலும் அறிய  மன்னார் சோகம்: சிறுமிக்கு நீதிகோரி ஆர்ப்பாட்டம், சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிப்பு