உங்களின் வீடு தேடி வந்து பணம் மற்றும் செல்வம் கொட்ட வேண்டுமா ? அப்போ இந்த பொருட்கள் எல்லாம் அவசியம் வீட்டில் இருக்க வேண்டும்!

0

இந்த உலகில் யார் செப்டம்பர் கொடுத்தாலும் போதாது என்று சொல்லாமல் அனைவரும் ஆசை கொண்டு இன்னும் வேண்டுமென்று கேட்கும் ஒரே பொருள் பணம் தான். இந்த பணத்தை நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்து விட்டாலும் அந்த பணத்தை கட்டி காப்பது என்பது அதைவிட பெரிய கஷ்டம்.

இப்படி நீங்கள் சம்பாதித்த பணம் உங்களிடம் நிலையாக இருக்கவும் மேலும் உங்கள் வீட்டில் கூரையை பிய்த்துக் கொண்டு பணம், செல்வம் மற்றும் சகல ஐஸ்வர்யங்களும் கொட்டுவதற்கு உங்கள் வீட்டில் குடி கொண்டு இருக்கும் மகாலட்சுமி தாயார் சந்தோஷப்படுத்தினாலே போதும்

அதைப்பற்றி நாம் இந்த ஆன்மீகம் குறித்து தொகுப்பே தெளிவாக காணலாம் வாருங்கள்.

முதலில் லட்சுமி தேவி உங்கள் வீட்டில் குடியேற வேண்டும் என்றால் உங்கள் வீடு எப்போதும் லட்சுமி கடாட்சம் நிறைந்ததாக இருக்க வேண்டும்.

அதற்காக நமது சாஸ்திர சம்பிரதாயங்கள் சொல்வது படி லட்சுமி தேவியை உங்கள் வீட்டிற்கு ஈர்க்கும் என சொல்லப்படும் பூஜைகள், பரிகாரங்கள் ஏன் உங்கள் வீட்டில் லட்சுமி தேவிக்கு விருப்பமான பொருள்களை வைத்தால் லட்சுமி தேவி உங்கள் வீட்டில் இருக்கும் குடியிருப்பாள்.

இப்படி நாம் என்னென்ன செய்தால் லட்சுமி தேவி நாம் வீட்டிற்கு குடி வருவாள் என்பதனை பற்றி விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.

ஒற்றைக்கண் தேங்காய்

உங்களின் வீடு தேடி வந்து பணம் மற்றும் செல்வம் கொட்ட வேண்டுமா ? அப்போ இந்த பொருட்கள் எல்லாம் அவசியம் வீட்டில் இருக்க வேண்டும்! - Lanka News - Jaffna News

பொதுவாக தேங்காயில் மூன்று கண்கள் இருப்பது வழக்கமான ஒன்று. ஆனால் அதிலேயே ஒற்றை கண் உடைய தேங்காய்களை மாந்திரீக தாந்திரீகங்கள் செய்வதற்கு பயன்படுத்துவார்கள். அந்த ஒற்றைக்கும் தேங்காயை உங்கள் வீட்டில் வைப்பது மங்களத்தை உண்டாக்கி மகாலட்சுமி தாயாரை ஈர்க்கும்.

தேங்காய்

நாம் பூஜைக்காக பயன்படுத்தும் தேங்காயை ஸ்ரீஃபல் எனவும் அழைக்கிறார்கள். இதற்கு அர்த்தம் என்னவென்றால் மகாலட்சுமி தேவிக்கு விருப்பமான பழம் என்று அர்த்தம்.

மேலும் தேங்காய் ஒரு தூய்மையான பழமாக இந்து புராணங்கள் நமக்கு கூறுகின்றனர். இந்த தேங்காயை நம் வீட்டில் வைப்பது லட்சுமி தேவிக்கு அழைப்பு விடுப்பதற்கு சமம்.

லட்சுமி தேவி கால் தடம்

வெள்ளியால் செய்யப்பட்ட லட்சுமிதேவியின் கால் தடங்களை வீட்டில் வைப்பதன் மூலம் லட்சுமி தேவி நிரந்தரமாக நம் வீட்டிலேயே தங்கி விடுவாள். அப்படி நீங்கள் வைக்கும் லட்சுமிதேவியின் கால் தடங்கள் உங்கள் வீட்டில் பணம் இருக்கும் திசையை பார்த்தவாறு வையுங்கள்.

மேலும் அறிய  வாகனப் பதிவில் மோசடி.!

சோவி

உங்களின் வீடு தேடி வந்து பணம் மற்றும் செல்வம் கொட்ட வேண்டுமா ? அப்போ இந்த பொருட்கள் எல்லாம் அவசியம் வீட்டில் இருக்க வேண்டும்! - Lanka News - Jaffna News

லட்சுமி தேவி கடலில் இருந்து தோன்றியவர் என அனைவரும் அறிந்ததே. அதனால் கடலில் இருக்கும் சிறிய சிப்பி வகையான சோவிகளை நம் வீட்டின் வைப்பதன் மூலம் மகாலட்சுமி தாயாரை நம் வீட்டிற்கு குடி வருவாளாம்.

பாதரச விநாயகர் சிலை

பாதரசத்தால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வீட்டில் வைப்பது. உங்களுக்கு உங்கள் வீட்டிற்கு மங்களத்தை கொடுக்கும் மேலும் அது உங்கள் வீட்டிற்கு லட்சுமி தேவியை ஈர்க்கும் ஏன்னென்றால் பாதரசம் அனைத்து கடவுள்களுக்கும் விருப்பமான ஒன்று.

லட்சுமி தேவி சிலை

மகாலட்சுமி தேவி மற்றும் விநாயகரின் சிலைகளை அருகில் அருகில் வைப்பது மூலம் மகாலட்சுமி தேவியார் குளிர்ந்து போவாள் . உங்கள் வீட்டிற்கு ஈர்க்கப்படுவாள் மேலும் நீங்கள் அப்படி வைக்கும் சிலைகள் வெள்ளியால் செய்யப்பட்ட சிலைகளாக இருக்கும் பட்சத்தில் மகாலட்சுமி உங்கள் வீட்டிலேயே நிரந்தரமாக வாசம் செய்வாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here