Home CRIME NEWS ஐஸ் போதை வியாபாரியிடம் தொலைபேசி, பணம் கொள்ளை – 2 பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கைது

ஐஸ் போதை வியாபாரியிடம் தொலைபேசி, பணம் கொள்ளை – 2 பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கைது

0

வெலிக்கடை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து ஆப்பிள் கையடக்கத் தொலைபேசி மற்றும் 25 ஆயிரத்து 300 ரூபா பணம் ஆகியவை பலவந்தமாக பறிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட இருவர் கோட்டை மற்றும் கெசல்வத்தை பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றியவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி இரண்டு கான்ஸ்டபிள்களும் மேற்படி சந்தேக நபரை கடந்த ஜுலை 23 ஆம் திகதி ராஜகிரிய, ஃபோர்டேகொட பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு முன்பாக 2 கிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்து முச்சக்கரவண்டியில் ஏற்றிக்கொண்டு செல்லும் வழியில் பலவந்தமாக பொருட்களை எடுத்துச் கொண்டு அவரை விடுவித்துள்ளனர்.

இது தொடர்பில் வெலிக்கடை பொலிஸாரிடம் சந்தேகநபர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், நீண்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு இரவோடு இரவாக சந்தேகநபர்கள் இருவரையும் கைதுசெய்துள்ளனர்.

மேலும் அறிய  நாட்டை விட்டு வெளியேறி வெளிநாட்டில் வேலை செய்யும் தாதிக்கு இலங்கையில் தொடர்ந்தும் சம்பளம்!
Previous articleசிறுமியை புதருக்குள் அழைத்துச் சென்று முத்தமிட்ட 43 வயது நபருக்கு நேர்ந்த கதி
Next articleகணவன் தாக்கியதில் 24 வயதுடைய மனைவி மரணம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here