கஜமுத்து ஒன்றை விற்பனை செய்வதற்கு முயன்ற நால்வர் கைது

0

கஜமுத்து ஒன்றை விற்பனை செய்வதற்கு முயன்ற நால்வரை தெஹியோவிட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தெஹியோவிட்ட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அல்கொட பகுதியில் கஜமுத்து ஒன்று விற்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் அடிப்படையில் தெஹியோவிட்ட பொலிஸார் சுற்றிவளைப்பில் ஈடுபட்ட நிலையில், குறித்த சந்தேக நபர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு சந்தேக நபர்கள் பயன்படுத்திய வேன் ஒன்றையும் 19 கிராம் 400 மில்லிகிராம் எடைகொண்ட கஜமுத்து ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மாவனெல்ல மற்றும் பிரிமத்தலாவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை தெஹியோவிட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கஜமுத்து ஒன்றை விற்பனை செய்வதற்கு முயன்ற நால்வர் கைது - Lanka News - Jaffna News கஜமுத்து ஒன்றை விற்பனை செய்வதற்கு முயன்ற நால்வர் கைது - Lanka News - Jaffna News

மேலும் அறிய  மட்டக்களப்பில் சற்றுமுன்னர் இடம்பெற்ற வாகன விபத்து-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here