கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் யாழில் நபரொருவர் சடலமாக மீட்பு

0

யாழ். கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மிருசுவில் – கரம்பகம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கரம்பகம் பகுதியில் இன்று (31.03.2023) காலை குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் வெட்டுகாயங்களுடன் தோட்டக்குடிலில் காணப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிவசோதி சிவகுமார் (வயது 43) என்ற நபரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாக குடும்பத்தை பிரிந்து வாழும் இவர் தோட்டத்தில் தங்குவதை வழமையாக கொண்டுள்ளார்.

இந்நிலையிலேயே இன்று காலை கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் அறிய  மலையகத்தில் உலக சாதனையை நோக்கி இசைப்பயணம்-அசானியும் பங்கேற்பு..!