காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு

0

புதுக்குடியிருப்பில் ஆண்ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள தென்னங்காணி ஒன்றில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

16-09-23 இன்று காலை குறித்த சடலம் அடையாளம் காணப்பட்டு மேலதிக நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியை சேர்ந்த 29 வயதான இளைஞன் ஒருவர் கடந்த 13 ஆம் திகதியிலிருந்து காணவில்லையென கடந்த 15 ஆம் தேதி உறவினர்களால் போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

கோம்பாவில் பகுதியைச் சேர்ந்த இராசலிங்கம் சுதர்சன் என்ற 29 வயதுடைய குறித்த இளைஞனே காணாமல் போய் உள்ளதாக நேற்றைய தினம் 15-09-23 உறவினர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது

இவ்வாறு காணாமல் போன இளைஞன் இன்று  புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் மருத்துவமனைக்கு அருகில் உள்ள தென்னங்காணி ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு - Lanka News - Jaffna News

இறந்து இரண்டு நாட்களுக்கு மேல் ஆன நிலையில் குறித்த சடலம் இனங்காணப்பட்டுள்ளது

சம்பவம் தொடர்பில் சடலத்தை மீட்க நடவடிக்கை மற்றும் மேலதிக விசாரணைகளை புதுகுடியிருப்பு போலீசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

மேலும் அறிய  மன்னாரை உலுக்கிய 10 வயது சிறுமியின் மரணம்-சற்று முன் வெளியான மேலதிக தகவல்..! {படங்கள்}

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here