காதலிக்கு அனுப்பி வைக்கப்பட்ட புகைப்படம் : தனியார் பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு !

0

தனியார் பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் சடலம், அவர் தங்கியிருந்த அறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மாணவனின் கழுத்துப் பகுதியில் போர்வை ஒன்று சுற்றப்பட்டவாறான புகைப்படத்தை காதலியின் கைத்தொலைபேசிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் மஹரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் கிரிவத்துடுவ பிரதேசத்தில் வசிக்கும் 22 வயதுடைய மாணவர் என தெரிவிக்கப்படுகிறது.

பொரளையில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்கும் உயிரிழந்த மாணவன், யுவதி ஒருவருடன் காதல் தொடர்பை பேணியிருந்த நிலையில் அவருடனான தொடர்பை சில காரணங்களால் அந்த யுவதி நிராகரித்து வந்துள்ளமையும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த மாணவின் சடலம் பன்னிப்பிட்டியவில் உள்ள வீடு ஒன்றின் அறையில் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் அறிய  யாழில் இளம்பெண் தவறான முடிவு..!