சாய்ந்தமருது பெண்கள் சந்தைக்கு அருகில் கடற்கரை வீதியை மறித்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

0

கரையோரப் பாதுகாப்பு தரப்பினர் கடலரிப்பபைத் தடுப்பதற்கு எனத் தெரிவித்து பாரிய முண்டுக் கற்களை மீன் பிடி நடவடிக்கைகளுக்காகப் போக்குவரத்து செய்யும் பாதையில் போட்டுவிட்டு நாட்கள் பல கடந்தும் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கண்டித்து சாய்ந்தமருது பெண்கள் சந்தைக்கு அருகில் உள்ள கடற்கரை வீதி பாதையை தோணிகளைக் கொண்டு மறித்து மீனவர்கள் இன்று (18) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சில மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பிதம டைந்திருந்தது.

கடலரிப்பு மற்றும் அதிகாரிகளின் இவ்வாறான நடவடிக்களால் எங்களது நாளாந்த மீன் பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. உரிய அதிகாரிகள் இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதேவேளை சாய்ந்தமருது பொலிஸாரும் கரையோரப் பாதுகாப்பு தரப்பினரும் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வருகைதந்து மீனவர்களுடன் சமரசமாகப் பேசியதன் பின்னர் சுமார் 02 மணித்தியாலங்களின் பின்னர் கற்கள் போடும் வேலைகளை துரிதமாக செய்கின்றோம் என்று உறுதி தெரிவித்ததற்கு இணங்க மீனவர்களால் தோணிகளைக் கொண்டு மறிக்கப்பட்ட பாதையில் தள்ளி வைக்கப்பட்டிருந்த தோணிகள் அகற்றப்பட்டன.

இங்கு சாய்ந்தமருது முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் மற்றும் மீனவர் சங்கங்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்

சாய்ந்தமருது பெண்கள் சந்தைக்கு அருகில் கடற்கரை வீதியை மறித்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம் - Lanka News - Jaffna News சாய்ந்தமருது பெண்கள் சந்தைக்கு அருகில் கடற்கரை வீதியை மறித்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம் - Lanka News - Jaffna News சாய்ந்தமருது பெண்கள் சந்தைக்கு அருகில் கடற்கரை வீதியை மறித்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம் - Lanka News - Jaffna News சாய்ந்தமருது பெண்கள் சந்தைக்கு அருகில் கடற்கரை வீதியை மறித்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம் - Lanka News - Jaffna News சாய்ந்தமருது பெண்கள் சந்தைக்கு அருகில் கடற்கரை வீதியை மறித்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம் - Lanka News - Jaffna News

மேலும் அறிய  9 வயது சிறுமியை வல்லுறவிற்கு உட்படுத்தி கொன்ற 50 வயது காமுகன்!! மன்னாரில் பதட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here