சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞன் தலைமறைவு!

0

வவுனியா பாரதிபுரம் பகுதியில் கடந்த 22ஆம் திகதி மாலை தனியார் வகுப்பு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 14 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய இளைஞனுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் குறித்த இளைஞன் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பாரதிபுரம் பகுதியில் கடந்த புதன்கிழமை மாலை இடம்பெற்ற இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

முறைப்பாட்டையடுத்து பொலிஸார் குறித்த சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்து மருத்துவப்பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

இதையடுத்து குறித்த இளைஞரைத் தேடிச் சென்றபோதும் இளைஞன் தலைமறைவாகியுள்ளது தெரியவந்துள்ளது.

இளைஞனைக் கைது செய்யுமாறு கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் பொதுமக்கள் ஒன்றிணைந்து இன்று பதில் பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, தலைமறைவாகிய இளைஞரைக் கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் பொது மக்களுக்கு உறுதி வழங்கியதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் அறிய  கல்முனை மேல் நீதிமன்றத்தினால் ஆளுநர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக தடையுத்தரவு..!{படங்கள்}