யாழ் குடாநாட்டில் இருந்து நயினாதீவுக்கு படகில் சென்று கொண்டிருந்த தமிழ் குடிமகன் ஒருவர் ஈவிரக்கமின்றி இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இது தொடர்பிலான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இன்று காலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நயினாதீவுக்கு செல்லும் படகுகளில் மேலே அல்லது உள்ளே தரையில் அமர்ந்து பயணிக்க வாய்ப்பு உள்ளது. எனினும் குறித்த பயணி மேல் மாடியில் அமர்ந்தான், அங்கு சில சிங்கள குடிமக்களும் இருந்தனர்.
இந்நிலையில் சிங்களப் பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. எனினும் அதற்கு தமிழ் குடிமகன் மறுத்து, “ஏன் நான் மட்டும்?” செல்லவேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனையடுத்து அவர்களின் உத்தரவை மறுத்த காரணத்திற்காக, குறித்த நபர் கடல்படையினரால் தாக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். இதன்போது அங்கிருந்த பொதுமக்களுக்கும் காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந் நிலையில் கடற்படையின் காட்டுமிராண்டி தனத்திற்கு பலரும் விசனங்களை வெளியிட்டுள்ளனர்.
View this post on Instagram