நானுஓயா நீரோடையிலிருந்து காணாமல்போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

0
நானுஓயா, கிரிமிட்டிய பகுதியில் உள்ள சிறிய நீரோடையில் இருந்து ஆணொருவரின் சடலம் இன்று சனிக்கிழமை (9) காலை மீட்கப்பட்டுள்ளது.

நானு ஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானு ஓயா கிலாரண்டன் பகுதியில் வசித்த 4 பிள்ளைகளின் தந்தை நேற்று வெள்ளிக்கிழமை (08) இரவு முதல் காணாமல்போன நிலையிலேயே அவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் நானுஓயா கிலாரண்டன் கீழ் பிரிவைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய சித்திரபாலன் மகேஸ்வரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நீரோடையில் சடலமொன்று இருப்பதாக பிரதேச மக்களினால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, குறித்த இடத்திற்கு விரைந்த நானு ஓயா பொலிஸார் சடலத்தை மீட்டனர்.

நானு ஓயா கிரிமிட்டி நகரப்பகுதிக்கு பொருட்கள் வாங்குவதற்கு செல்வதாக நேற்று (8) இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் இன்று (09) காலை வரை வீட்டுக்கு வராதமையினால் உறவினர்களும், பிரதேவாசிகளும் தேடியுள்ளனர்.

இதனையடுத்து இவர் இவ்வாறு நீரோடையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது கொலையா ? தற்கொலையா ? என பலகோணங்களில் நானுஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நானுஓயா நீரோடையிலிருந்து காணாமல்போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு! நானுஓயா நீரோடையிலிருந்து காணாமல்போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

மேலும் அறிய  வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு அமைச்சர் சொன்ன தகவல்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here