நுவரெலியா நானுஓயாவில் கெப் வாகனம் விபத்து – ஒரே குடும்பததைச் சேர்ந்த அறுவர் காயம்

0

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா தலவாக்கலை ஏ7 பிரதான வீதியில் கிரிமிட்டி பகுதியில், கொழும்பு பிலியந்தலையிலிருந்து நுவரெலியா நகருக்கு பயணித்த கெப் ரக வாகனமொன்று வீதியைவிட்டு விலகி 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து இன்று முற்பகல் (21) விபத்துக்குள்ளாகியதில் 6 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வாகனத்தில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் அனைவரும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியா நானுஓயாவில் கெப் வாகனம் விபத்து – ஒரே குடும்பததைச் சேர்ந்த அறுவர் காயம் - Lanka News - Jaffna News

வாகனத்தின் வேகத்தை கட்டுபடுத்த முடியாமல் போனதால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்துத் தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அறிய  யாழ் வருடாந்த பொலிஸ் அணிவகுப்பும்-பரிசோதனையும்..!{படங்கள்}

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here