நெல் உலரவிடுவதனால ஏற்பட்ட 2வது உயிர்ப்பலி: 6 பிள்ளைகளின் தந்தையை பலியெடுத்த லொறி

0

கிளிநொச்சி பரந்தன் முல்லைத்தீவு வீதியில் கண்டாவளை சந்திக்கருகில் இன்று பிற்பகல் பாரவூர்தியும் துவிச் சக்கர வண்டியும் மோதி இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

நெல்லை வீதியில் உலர விடப்படும் நிலையில் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், புளியம்பொக்கணை பகுதியில் இருந்து கண்டாவளை நோக்கி பயணித்த முதியவர் மீது பரந்தன் பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த பாரஊர்தி மோதியுள்ளது.

இவ்விபத்தில் வட்டகச்சி பகுதியைச் சேர்ந்த கதிரவேலு யாதவராசா என்ற 58 வயதுடைய 6 பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலீஸார் மேலதிகவிசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, கடந்து சில வாரங்களுக்கு முன்னர் பரந்தன் பூநகரி வீதியிலும் நெல் உலரவிட்டதன் காரணமாக ஏற்பட்ட விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலியாகியிருந்தாார். அத்தோடு மேலும் சிலர் விபத்தினால் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நெல் உலரவிடுவதனால ஏற்பட்ட 2வது உயிர்ப்பலி: 6 பிள்ளைகளின் தந்தையை பலியெடுத்த லொறி - Lanka News - Jaffna News நெல் உலரவிடுவதனால ஏற்பட்ட 2வது உயிர்ப்பலி: 6 பிள்ளைகளின் தந்தையை பலியெடுத்த லொறி - Lanka News - Jaffna News நெல் உலரவிடுவதனால ஏற்பட்ட 2வது உயிர்ப்பலி: 6 பிள்ளைகளின் தந்தையை பலியெடுத்த லொறி - Lanka News - Jaffna News

மேலும் அறிய  ஐப்பான் தூதரக பிரதிநிதிகளுடன் எம்.எஸ்.தௌபீக் எம்.பி சந்திப்பு; முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்..!{படங்கள்}