பிறப்புறுப்பை விரல் நுனியால் தொட்ட மசாஜ் ஊழியர் கைது

0

மசாஜ் செய்ய வந்த ஜேர்மனிய பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படும் ஊழியர் ஒருவரை கைது செய்துள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர்.

உனவட்டுன மாட்டரம்பவில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு இன்றையதினம் (25) மசாஜ் செய்து கொள்வதற்காக ஜேர்மன் பெண்ணொருவர் வந்துள்ளார்.

மசாஜ் செய்து கொண்டிருந்த ஊழியர் ஒருவர், தனது பிறப்புறுப்பை விரல் நுனியால் தொட்டு தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக 65 வயதுடைய ஜேர்மன் பெண் ஹபராதுவ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

அந்த முறைப்பாட்டுக்கு அமைய 45 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபரை காலி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் அறிய  பாடசாலை மாணவியை பல தடவை வன்புணர்ந்த ஆசிரியருக்கு நேர்ந்த கதி