தற்சமயம் எங்கு திரும்பினாலும் சோசியல் மீடியாவில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சயை பற்றிய பேச்சு தான். இவர் அப்பா போல் ஹீரோவாக விரும்பாமல் தாத்தா மாதிரி இயக்குனராக அவதாரம் எடுக்கப் போகிறார். அந்த படத்தை லைக்கா நிறுவனம் தான் தயாரிக்கிறது. ஆனால் இந்த விஷயத்தை வைத்து லைக்கா பெரும் பலப்பரிட்சையையே நடத்தப் போகிறது.
அதாவது லைக்காவிற்கு கிட்டத்தட்ட விஜய் 9 வருடங்களாக எந்த கால் சீட்டும் கொடுக்கவில்லை. லைக்கா விஜய் கூட்டணியில் வெளியான கத்தி படத்துக்கு பின் இவர்களுக்குள் ஏற்பட்டால் மனஸ்தாபம் காரணமாக இன்று வரை சேரவில்லை. ஒன்பது வருடத்திற்கு முன்பு வெளியான இந்த படம் விவசாயத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதால் விமர்சன வாயிலாக நல்ல வரவேற்பு கிடைத்தாலும் வசூல் ரீதியாக எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.
இதனால் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா அதிருப்தி அடைந்ததாக விஜய் காதுக்கு எட்டியதும், இனி இந்த தயாரிப்பு நிறுவனத்துடன் கூட்டு சேரக்கூடாது என தளபதி முடிவெடுத்தார். இப்படியே 9 வருடம் கடந்து விட்டது. இதுவரை லைக்கா- விஜய் கூட்டணியில் எந்த படமும் வெளியாகவில்லை.
ஆனால் லைக்கா விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சயை ஒரு இயக்குனராக அறிமுகப்படுத்தியுள்ளது. விஜய்யை பொருத்தவரை ஜேசன் சஞ்சய் யாரிடமாவது அசிஸ்டன்ட் இயக்குனராக பணி ஆற்ற வேண்டும். ஆனால் ஜேசன் சஞ்சய் இன்று வரை அதை செய்யவில்லை. இவர் ஒரு சில குறும்படங்களை இயக்கிய அனுபவத்தை மட்டுமே வைத்துக் கொண்டு இப்போது பெரிய பட்ஜெட் படத்தில் கமிட்டாகி இருக்கிறார்.
இப்படி இருக்கையில் சஞ்சய் இயக்குனராக நிச்சயமாக வெற்றி பெறுவாரா என்பதை விஜய்க்கு சந்தேகம் தான். லைக்கா அவரை இயக்குனர் ஆக்கி பெரும் பலப்பரீட்சை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஒரு அறிமுக இயக்குனராய் தன் பையனை வைத்து பெரிய தயாரிப்பாளர்கள் முன்வருவது விஜய்க்கு தயக்கமாக இருக்கிறது.
அது மட்டுமின்றி தன் பையனுக்கு இது சரியான நேரம் இல்லை என்றும் கூறி வருகிறார் விஜய். மறுபுறம் லைக்கா மீது வைத்திருந்த 9 வருட பகையை வெளியில் காட்டிக் கொள்ளாமல் மகனுக்காக விஜய் அமைதி காத்து வருகிறார். எப்படியோ விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படம் ரசிகர்களுக்கு பிடித்தால் போதும் என்பது தான் தற்போது தளபதியின் வேண்டுதலாக இருக்கிறது.