பேருந்தில் பயணித்த தாதிய மாணவியின் மார்பகத்தை தடவிய 54 வயதான பொலிஸ் பரிசோதகர் நையப்புடைப்பு

0

பேருந்தில் பயணித்த பெண் ஒருவரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (27.02.2023) மாலை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர் இன்றைய தினம் (28.02.2023) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

களுத்துறையில் இருந்து அம்பலாங்கொடை வரை பயணித்த பேருந்து வண்டியிலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

குறித்த பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த பயிற்சி பெறும் தாதியான யுவதி ஒருவரின் அருகில் நின்று கொண்டிருந்த பொலிஸ் பரிசோதகர், சனக்கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி யுவதியின் மார்பகங்களைத் தடவியுள்ளார்.

இதனையடுத்து குறித்த யுவதி பேருந்தில் சத்தமிட்டதைத்தொடர்ந்து ஏனைய பயணிகள் பொலிஸ் பரிசோதகரை வளைத்துப் பிடித்துத் தாக்கி, பொலிஸில் ஒப்படைத்துள்ளனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர், களுத்துறை பிரதேச பொலிஸ் நிலையம் ஒன்றில் சிறு முறைப்பாடுகள் பிரிவின் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றும் 54 வயதான நபர் என்று தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அறிய  மட்டக்களப்பில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி..!