போதைவஸ்து பாவனையின் தாக்கம் தனது வீட்டையே தீ வைத்து எரித்த நபர், வீடு முற்றாக சேதம்

0

புதிய காத்தான்குடி 2 ஆம் குறுக்கு வீதியில் வசிக்கும் நபர் ஒருவர் போதை வஸ்துக்கு அடிமையான நிலையில் தொடர் பாவனைக்கு பணமில்லாத காரணத்தினால் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது வீட்டையே தீ வைத்து எரித்துள்ளார்.

இன்று (27/10/2023) அதிகாலை சுமார் 1.30 மணியளவிலேயே மேற்படி சம்பவம் இடம் பெற்றுள்ளது.

தீயணைப்பு பிரிவினரின் உதவியுடன் தீ மேலும் பரவாமல் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அறிய  மலையகத்தில் பழங்களை திருடியவருக்கு நேர்ந்த கதி..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here