மண்வெட்டியால் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் கொலை

0

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலஹா தோட்டத்தில் குடும்பஸ்தர் ஒருவர் மண்வெட்டியால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதலை நடத்திவிட்டு தலைமறைவான சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

40 வயதுடைய வீரசாமி பெஞ்சமின் என்ற 3 பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலில் கொல்லப்பட்ட நபர் தனது தாயுடன் நேற்றிரவு முரண்பட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட சத்தம் கேட்டு, அது தொடர்பில் விசாரிக்க சென்ற அயல் வீட்டு காரருடன், வாய் தர்க்கம் ஏற்பட்ட நிலையில் குறித்த நபர் மண்வெட்டிப் பிடியால் அவரைத் தாக்கியுள்ளார்.

இதனால் படுகாயமடைந்த நபர் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சைபெற்று வந்த நிலையில் நேற்று (30.08.2023) அதிகாலை உயிரிழந்துள்ளார்.

தக்குதலை நடத்திய பெரியசாமி விஜயகுமார் என்ற 27 வயதுடைய நபர் தலைமறைவான நிலையில், லிந்துலை நாகசேனை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

மேலும் அறிய  ஐப்பான் தூதரக பிரதிநிதிகளுடன் எம்.எஸ்.தௌபீக் எம்.பி சந்திப்பு; முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்..!{படங்கள்}

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here