மனைவியின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி மற்றுமொரு பெண்ணுடன் பறக்க முயன்ற கணவன் சிக்கினார்

0

மனைவியின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி மற்றுமொரு பெண்ணை இத்தாலிக்கு அழைத்துச் செல்ல முயன்ற கணவன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால், செவ்வாய்க்கிழமை (31) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட இவர் தனது ஐந்து வயது மகன் மற்றும் அவரது மனைவி என நம்பப்படும் காங்கேசன்துறையைச் சேர்ந்த 29 வயதுடைய பெண்ணுடன், செவ்வாய்க்கிழமை (31) ஏர் அரேபியா விமானத்தில் பயணம் செய்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பிற்பகல் 01.45 மணிக்கு வந்துள்ளார்.

அங்கு, குடும்பத்தினரின் ஆவணங்களை பரிசோதிப்பதற்காக, குடியேற்ற சாளரத்திற்கு வந்தபோது அவர்கள் மூவர் மீதும் சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் மூவரும் எல்லை கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளிடம் அனுப்பிவைக்கப்பட்டனர்.

தொழில்நுட்ப சோதனைகள் மற்றும் முதற்கட்ட விசாரணைகளின் போது இந்த சிறு குழந்தைக்கு அவர் தந்தை என்பது உண்மை. எனினும் அப்பெண், இவரது மனைவி இல்லை என தெரியவந்துள்ளது.

இந்த நபர் சில வாரங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்த போது இத்தாலியில் இருந்து தனது மனைவியின் கடவுச்சீட்டை கொண்டுவந்துள்ளார். கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு முத்திரையை போலியாக தயாரித்து அதில் குத்தியும் உள்ளார்.

அதே கடவுச்சீட்டைப் பயன்படுத்தி மற்றுமொரு பெண்ணை இத்தாலிக்கு அழைத்துச் செல்ல முயற்சித்ததை குடிவரவு அதிகாரிகள் மேலும் கண்டுபிடித்துள்ளனர்.

அவர் தனது மனைவியின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி மற்றொரு பெண்ணை இத்தாலிக்கு அழைத்துச் சென்றுள்ளமையும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் அறிய  மற்றுமொரு கோர விபத்து-ஒருவருக்கு நேர்ந்த துயரம்..!