மன்னாரில் 5 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

0
29
மன்னாரில் 5 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது
articles RQJGJeeguzRYNZhjP6Tl
மன்னாரில் உயிலங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உயிலங்குளம் பிரதான சந்தி பகுதியில் தீர்வை வரி செலுத்தாமல் நாட்டுக்கு சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி வெளிநாட்டு சிகிரெட்டுகளுடன் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கல்பிட்டி பகுதியில் இருந்து மன்னார் நகரில் உள்ள இரவு உணவகங்களுக்கு தீர்வை வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை விற்பனைக்காக கொழும்பு மன்னார் பேரூந்தில் கடத்தி வந்த நிலையிலேயே உயிலங்குளம் பகுதியில் குறித்த நபரை மன்னார் மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் மன்னார் பகுதியைச் சேர்ந்த 25 வயதான நபர் என்பதுடன், சந்தேக நபரிடம் மன்னார் குற்றபுலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் சான்றுபொருள் மற்றும் சந்தேக நபரை ஆஜர்படுத்தியுள்ளனர்.

மேற்படி சந்தேகநபரிடமிருந்து 2900 சிகிரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதன் தற்போதைய சந்தை மதிப்பு 5 இலட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் உயிலங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உயிலங்குளம் பிரதான சந்தி பகுதியில் தீர்வை வரி செலுத்தாமல் நாட்டுக்கு சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி வெளிநாட்டு சிகிரெட்டுகளுடன் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மன்னாரில் உயிலங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உயிலங்குளம் பிரதான சந்தி பகுதியில் தீர்வை வரி செலுத்தாமல் நாட்டுக்கு சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி வெளிநாட்டு சிகிரெட்டுகளுடன் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேலும் அறிய  கண் வைத்தியர் தனியார் விடுதியில் சடலமாக மீட்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here