முதல் சேவையின் போதே 3 ரூபாய் விலைக் கழிவுடன் சினோபெக் எரிபொருள் விநியோகம்

0

சீனாவை தளமாகக் கொண்ட முன்னணி சர்வதேச பெட்ரோலிய நிறுவனமான சினோபெக், இலங்கையில் தனது வர்த்தக நடவடிக்கைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது.

கொழும்பில் மத்தேகொடவில் நிறுவப்பட்ட அதன் முதல் நிலையத்தில் எரிபொருள் விநியோகம் ஆரமபமாகியுள்ளது.

சீன பெட்ரோலிய நிறுவனங்களின் உள்ளூர் துணை நிறுவனமான சினோபெக் லங்கா சந்தை ஊக்குவிப்பு பிரச்சாரத்துடன் தனது நடவடிக்கைகளைத் தொடங்கியது.

அதன்படி பெட்ரோல், டீசல் லிட்டருக்கு 3 ரூபாய் விலைக் கழிவோடு எரிபொருள் நிரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2023 மார்ச் சீனாவின் சினோபெக், அவுஸ்ரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் மற்றும் அமெரிக்காவின் ஆர்எம் பார்க்ஸ், ஷெல் பிஎல்சியுடன் இணைந்து இலங்கையில் எரிபொருள் சந்தையில் நுழைவதற்கான உரிமங்களை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியது.

ஒரு நிலையான மற்றும் தடையற்ற எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் மே மாதம், இலங்கை மற்றும் சினோபெக் பிரதிநிதிகளுக்கு இடையே ஒப்பந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

மேலும் அறிய  மன்னார் சோகம்: சிறுமிக்கு நீதிகோரி ஆர்ப்பாட்டம், சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here