மோட்டார் சைக்கிள் – லொறி நேருக்குநேர் மோதி விபத்து: தந்தையும் மகளும் பலி

0

குருநாகல் – வாரியபொல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர்.

வாரியபொல, மாதம்பே பகுதியில் மோட்டார் சைக்கிளும் லொறியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவரும் பின்னால் பயணித்தவரும் படுகாயமடைந்து சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், உயிரிழந்தவர்கள் 48 மற்றும் 16 வயதுடைய தந்தை மற்றும் மகளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய விபத்தின் பின்னர், லொறியின் சாரதி தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அறிய  தோண்டிய புதையலை எடுக்க நரபலிக்காக சிறுமியை வசியம் செய்து கடத்தியவர் மாட்டினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here