யாழில் கோர விபத்து: சாரதி பலி

0

யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் வான் ஒன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில், சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் பரந்தனை சேர்ந்த 27 வயதான குமாரசாமி கஜீபன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று (27) அதிகாலை 3.30 மணியளவில் கொடிகாமம் – மிருசுவில் பகுதியில் உள்ள இராணுவ முகாமுக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

விபத்து சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் அறிய  கோர விபத்து : பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் பலி..!