யாழில் வீடொன்றில் வெளிநாட்டு பணம், தங்க நகைகள் பட்டப்பகலில் திருட்டு

0

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுகுட்பட்ட நல்லூர் சட்டநாதர் கோவிலுக்கு அருகாமையிலுள்ள வீடொன்றில் இன்று (29) முற்பகல் வெளிநாட்டு பணம், தங்க சங்கிலி, தோடு, என்பன திருடப்பட்டுள்ளன.

குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுகுட்பட்ட நல்லூர் சட்டநாதர் கோவிலுக்கு அருகாமையிலுள்ள வீடொன்றில் இன்று (29) முற்பகல் 11மணியளவில் குறித்த திருட்டு இடம்பெற்றுள்ளது.

வயது முதிர்ந்த வீட்டின் உரிமையாளர் உறவினர்கள் வீட்டுக்கு சென்றிருந்த தருணத்தில் வெளிநாட்டு பணம், பெறுமதியான தங்க சங்கிலி – தோடு என்பன திருடப்பட்டுள்ளன.

வீட்டின் உரிமையாளர் குறித்த திருட்டு சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் மாலை முறைப்பாடு பதிவுசெய்ததையடுத்து யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

யாழில் வீடொன்றில் வெளிநாட்டு பணம், தங்க நகைகள் பட்டப்பகலில் திருட்டு - Lanka News - Jaffna News யாழில் வீடொன்றில் வெளிநாட்டு பணம், தங்க நகைகள் பட்டப்பகலில் திருட்டு - Lanka News - Jaffna News யாழில் வீடொன்றில் வெளிநாட்டு பணம், தங்க நகைகள் பட்டப்பகலில் திருட்டு - Lanka News - Jaffna News

மேலும் அறிய  சாமிமலை ப உள்ள கவரவில்லை சிங்கள பாடசாலையில் ஆசியர்கள் மற்றும் மாணவர்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம்..!{படங்கள்}

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here