யாழ்.போதனா வைத்தியசாலையில் முதல் தடவையாக மூளை அனியூரிசம் நோயை குணப்படுத்தும் சிசிக்சை வெற்றி..

யாழ்.போதனா வைத்தியசாலையில் முதல் தடவையாக மூளையில் ஏற்படும் அனியூரிசம் (Brain aneurysm) எனப்படும் நோயை சீர்செய்யும் (Endovascular Embolization) சிகிச்சை மூலம் நோயாளி நலம் பெற்றுள்ளார்.

இதுவரை காலமும் இந்நோய்க்கு சத்திரசிகிச்சை (Surgical clipping) முறை மூலம் மட்டும் தீர்வை பெற்று வந்த வடக்கு கிழக்கு மக்களுக்கு நிச்சயமாக இது ஓர் வரப்பிரசாதம். இரத்தக் குழாயினூடாக மேற்கொள்ளப்படும்.

இந்த சிகிச்சையின் மூலம் தொற்று (Infection) ஏற்படும் வாய்ப்புகள் மிகக் குறைவு என்பதுடன், குறைந்த நாட்களில் நோயாளி வழமை போல் இயங்க முடிகின்றது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து வந்திருந்த வைத்திய நிபுணர்களின் (Interventional radiologists) பிரசன்னத்துடன் வைத்திய நிபுணர் வைத்தியர் அன்டன் ஜெனிலும் (Con.Interventional radiologist) இதனை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளனர்.

அத்துடன் நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் ஆதித்தன் பொன்னம்பலம் (Con.Neuro surgeon) குறித்த நோயாளியின் நோய்நிலையை கண்டறிந்தது முதல், இச்சத்திரசிகிச்சையை பரிந்துரைத்தார்.

வெற்றிகரமாக சிகிச்சையை மேற்கொண்ட வைத்திய நிபுணர்கள் மற்றும் வைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள், சுகாதார உதவியாளர்கள் அனைவருக்கும் பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.