யாழ் வல்லை வெளியில் அதிவேக சாகாசத்தால் கோர விபத்து!! ரிக் ரோக் கவின் பலி

0

யாழ் வல்வையில் சற்று முன் நடந்த விபத்தில் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார்.

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி திருமகள் சோதி வீதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் கவிதாசன் (வயது 24) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.

வல்லை பகுதியில் வாகனம் ஒன்றினை முந்தி செல்ல முற்பட்ட வேளை குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றதாகவும், விபத்தில் படுகாயமடைந்த இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி இளைஞன் உயிரிழந்துள்ளார்

பொருட்களை ஏற்றி செல்லும் வானுடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டே இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது.

அன்மைக்காலங்களில் வடமாகணத்தில் இளைஞர்களின் கோரச்சாவு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த இளைஞன் பெயர் கவின் என்று தெரியவந்துள்ளது. முன்னே சென்ற இன்னொரு மோட்டார் சைக்கிளை முந்துவதற்காக அதிவேகமாக சாகாசத்தில் ஈடுபட்டுக் கொண்டு வீதியில் சென்றதாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞர் இந்த மோட்டார் சைக்கிளுடன் செல்பிகள் இட்டு சமூகவலைத்தளங்களில் பிரபலமானவர் எனத் தெரியவருகின்றது.

இவ்வாறான மோட்டார் சைக்கிள்களை வாங்கிக் கொடுத்து இயமனை பிள்ளையுடன் கூடவே அனுப்பும் பெற்றோருககு இந்த விபத்து சமர்ப்பணம்.

அத்துடன் இவ்வாறானவர்களை கண்டு மயங்கி லவ் பண்ணி கலியாணம் கட்ட முயலும் பொம்பிளைப் பிள்ளைகளுக்கும் இது சமர்ப்பணம்

யாழ் வல்லை வெளியில் அதிவேக சாகாசத்தால் கோர விபத்து!! ரிக் ரோக் கவின் பலி - Lanka News - Jaffna News யாழ் வல்லை வெளியில் அதிவேக சாகாசத்தால் கோர விபத்து!! ரிக் ரோக் கவின் பலி - Lanka News - Jaffna News யாழ் வல்லை வெளியில் அதிவேக சாகாசத்தால் கோர விபத்து!! ரிக் ரோக் கவின் பலி - Lanka News - Jaffna News யாழ் வல்லை வெளியில் அதிவேக சாகாசத்தால் கோர விபத்து!! ரிக் ரோக் கவின் பலி - Lanka News - Jaffna News

மேலும் அறிய  கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி: வெளியான தகவல்கள்