கந்தளாய் பகுதியில் இரவு தபால் ரயில் முன் பாய்ந்து தந்தையும் மகளும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
தந்தையும் மகளும் நீண்ட நேரமாக ரயில் தண்டவாளத்தின் அருகே நின்று கொண்டிருந்ததாகவும், ரயில் வந்ததும் தந்தையும் மகளும் ரயிலில் குதித்ததாகவும் அவர்கள் அடையாளம் தெரியவில்லை என்றும் நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
திருகோணமலையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி செல்லும் இரவு தபால் ரயிலில் தந்தை மகளை தள்ளிவிட்டு , தந்தையும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருகோணமலை -கந்தளாய் புகையிர நிலையத்திற்கு அருகில் இச்சம்பவம் இன்றிரவு இடம்பெற்றுள்ளது.
38 வயதுடைய தந்தையும் ஆறு வயதுடைய மகளுமே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்
உயிரிழந்த இருவரின் சடலமும் கந்தளாய் வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இவரது மனைவி குவைட் நாட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றி வரும் நிலையில் அவர் வேறு ஒரு நபருடன் தொடர்பில் இருப்பதாக கேள்வியுற்ற கணவன் விரக்தியில் கடிதம் ஒன்றை எழுதி சட்டைப் பையில் வைத்து தற்கொலை செய்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
கந்தளாய், பேராறு 02 பகுதியைச் சேர்ந்த 38 வயதான கணேசலிங்கம் திருவேந்திரன் மற்றும் அவரது 6 வயது மகள் திருவேந்திரன் கானா ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கந்தளாய் ஆரம்ப வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.