லியோ திரைப்படம்!! ஆடியோ லான்ச் வேண்டவே வேண்டாம்

0
13
leo lokesh 1000x600 1
leo lokesh 1000x600 1

லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக இருக்கிறது. இப்படத்தை பெரிதும் எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் அனைவரும் திருவிழா மாதிரி கொண்டாடுவதற்கு ஆர்வமாய் காத்துக் கொண்டிருக்கிறார்கள். வழக்கமாக விஜய் படம் திரையரங்கில் வருகிறது என்றால் ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி அவர்களுடைய அன்பை காட்டி விடுவார்கள்.

அதிலும் தற்போது லோகேஷ் கூட்டணியில் விஜய் நடித்திருக்கிறார் என்றால் அந்த படம் தாறுமாறாக தான் இருக்கும். வசூல் அளவிலும் பணமழையாய் கொட்ட போகும் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த வகையில் படம் வெளி வருவதற்கு முன் இப்படத்தின் ஆடியோ லாஞ்சை விஜய்யின் ரசிகர்கள் வழிமேல் விழி வைத்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் லோகேஷ், லியோ படத்தின் ஆடியோ லான்ச் சென்னையில் நடத்தி விடலாம் என்று கூறியிருக்கிறார். ஆனால் விஜய் வேண்டவே வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்திருக்கிறார். அத்துடன் அதற்கான காரணமாக ஐந்து விஷயங்களை கூறியிருக்கிறார். அதாவது சென்னையில் வைத்தால் கூட்டம் அலைமோதி கொண்டு வரும்.

அப்படி என்றால் அதற்கு தகுந்த இடம் இங்கே இல்லை. இதனால் தேவையில்லாத சர்ச்சை வெடிக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறியிருக்கிறார். அத்துடன் ஆடியோ லாஞ்சில் நான் என்ன பேசுகிறேன், அதில் என்ன விஷயங்களை திரித்து சொல்லலாம் என்று சிலர் கண்கொத்தி பாம்பாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் வழக்கம் போல் நான் குட்டிக்கதை சொல்ல வேண்டியது வரும்.

அப்படி நான் சொன்னால் அது அரசியலுக்கான என்ட்ரி என்று கூறி விடுவார்கள். மேலும் நான் ஏதாவது பேசினாலே அதை ரஜினியை தாக்கி தான் பேசினேன் என்று தேவையில்லாத வம்பில் மாட்டிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே ஜெயிலர் படத்தின் ஆடியோ லாஞ்சில் ரஜினி சாதாரணமாக பேசியதை எனக்கு எதிராக தான் பேசி இருக்கிறார் என்று திருப்பி விட்டார்கள்.

அந்த வகையில் நான் இப்பொழுது என்ன பேசினாலும் அவருக்கு பதிலடி கொடுத்திருக்கிறேன் என்று மாறிவிடும். அது தேவையில்லாத பிரச்சனை மட்டும் இல்லாமல் லியோ வசூலுக்கும் ஒரு சின்ன கரும்புள்ளியாக போய்விடும். அதனால் வேண்டவே வேண்டாம் என்று விஜய், லோகேஷிடம் கூறியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here