வாகன விபத்தில் சிக்கிய போலீஸ் உத்தியோகத்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

0

கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் சொகுசு மகிழுந்து ஒன்று மோதி, காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர் மனோஜ் பிரியங்கர (19498) இன்று காலை உயிரிழந்தார்.

நேற்றைய தினம் இந்த விபத்து நேர்ந்துள்ளதுடன், குறித்த விபத்தில் கறுவாத்தோட்ட காவல் நிலையத்தின், போக்குவரத்து பிரிவில் பணியாற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரே உயிரிழந்ததாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அவர் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில், மகிழுந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், 27 வயதுடைய அவர், கொழும்பில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் தொழில்நுட்ப பொறியாளராக கடமையாற்றுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரது, தந்தை காவல்துறை வைத்தியசாலையில், வைத்தியராக சேவையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரின் மகன் செலுதிய கார் பொலிஸ் உத்தியோகத்தர் மீது மோதியது

மேலும் அறிய  மன்னார் சோகம்: சிறுமிக்கு நீதிகோரி ஆர்ப்பாட்டம், சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here