Home தமிழ் நாடு இரு சக்கர வாகனத்தில் சீட் பெல்ட் போடவில்லை என்று 100 ருபாய் அபதாரம் விதித்த போலிஸ்!

இரு சக்கர வாகனத்தில் சீட் பெல்ட் போடவில்லை என்று 100 ருபாய் அபதாரம் விதித்த போலிஸ்!

17
0

சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக இருசக்கர வாகன ஓட்டிக்கு போலீசார் அபராதம் விதித்தது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த அரியத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர். இவர் வாகனம் இயக்கும் போது சீட் பெல்ட் அணியாமல் சென்றதால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

இதனை கண்ட சரவணன் இரு சக்கர வாகனம் வைத்திருக்கும் தனக்கு ஏன் சீட் பெல்ட் என குழம்பியுள்ளார்.

பின்னர் குறுஞ்செய்தியை ஆய்வு செய்ததில், அவரது வாகன எண்ணில் செந்தில்குமார் என்ற நபர் சீட் பெல்ட் அணியாமல் சென்றதால் சென்னை மடிப்பாக்கம் போலீஸ் அபராதம் விதித்ததாக கூறப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்துள்ள சரவணன், தனது வாகன எண்ணில் மற்றொரு நான்கு சக்கர வாகனம் பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகிறதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் தமிழக செய்திகளை தெரிந்து கொள்ள நமது இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here