Home இந்தியா பெண்ணுக்கு அணின் கைகளை பொறுத்திய மருத்துவர்களுக்கு காத்திருந்த நம்ப முடியாத ஆச்சரியம்!

பெண்ணுக்கு அணின் கைகளை பொறுத்திய மருத்துவர்களுக்கு காத்திருந்த நம்ப முடியாத ஆச்சரியம்!

13
0

இளம்பெண் ஒருவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்ட ஆணின் கைகள், நிறம் மாறியிருப்பது மருத்துவர்களை ஆச்சரியமடைய வைத்துள்ளது.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஷ்ரேயா சித்தனகவுடர். கடந்த 2017-ம் ஆண்டு இவர், புனேவில் இருந்து தனது ஊருக்கு சென்றுக்கொண்டிருந்த போது சாலை விபத்துக்குள்ளானார். அதில் அவரது கைகள் பறிபோகின.

இதனையடுத்து அவருக்கு கேரளாவில் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞர் ஒருவரின் இரு கைகளும் தானமாக வழங்கப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்து 2 ஆண்டுகள் முடிந்த நிலையில் தற்போது ஒரு ஆச்சரியமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஷ்ரேயாவுக்கு பொறுத்தப்பட்ட கைகள் தற்போது அவரின் உடல் நிறத்திற்கு ஏற்ப மாறியுள்ளது. இதனை கண்ட மருத்துவர்கள் ஆச்சரியமடைந்தனர். மேலும் இதற்கு அறிவியல் ரீதியிலான விளக்கம் அளிப்பது கடினம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பேசியுள்ள ஸ்ரேயா இது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். தொடக்கத்தில் கைகளை தூக்குவதற்கு சிரமமாக இருந்ததாகவும் ஆனால் தற்போது எவ்வித பிரச்னையும் இல்லையென்றும் தெரிவித்துள்ளார்

மேலும் இந்திய செய்திகளை தெரிந்து கொள்ள நமது இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here