Home மருத்துவம் குழந்தை இல்லா பிரச்சனையை தீர்க்க இதை மட்டும் செய்ங்க!

குழந்தை இல்லா பிரச்சனையை தீர்க்க இதை மட்டும் செய்ங்க!

13
0

திருமணமான பெண்களாக இருந்தாலும் சரி… வயதுக்கு வந்த பெண்களாக இருந்தாலும் சரி நீர்க்கட்டி பிரச்சினைகளால் பெரிதும் அவதிபடுகிறார்கள்.

இன்றைய காலக்கட்டத்தின் உணவுப் பழக்க முறைகளால் அதிகமானோருக்கு இந்த நீர்க்கட்டி பிரச்சினைகள் உருவாகின்றன.

நீர்க்கட்டி கோளாறை ஆங்கிலத்தில் பாலிசிஸ்டிக் ஓவரியன் சின்றோம் என்று அழைக்கப்படுகிறது. குழந்தையின்மைக்கு முக்கிய காரணம் இந்த நீர்க்கட்டிகள் தான்.

கர்ப்பப்பையில் நீர்க்கட்டி உருவாகுவதால் பெண்களின் மாதவிடாய் சுழற்சி பெரிதும் பாதிக்கப்படுகிறது.

கர்ப்பப்பை நீர்க்கட்டி உள்ளவர்களுக்கு ஆண் ஹார்மோன்கள் அதிகம் சுரக்கும். முகத்தில் ரோமங்கள் அதிகமாக வளரும்.

முகத்தில் நிறைய பருக்கள் உண்டாகும். உடல் எடை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும். மலட்டுத்தன்மையும் ஏற்படும்.

இந்த பிரச்சினையால் பெண்கள் குடும்பத்தில் மட்டும் அல்ல, சமூகத்திலும் அதிகமான இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

நீர்க்கட்டிகளை குணப்படுத்த வழிமுறைகள்

கழற்சிக்காயை உடைத்து அரைத்து அதனுடன் 10 மிளகை சேர்த்து அரைத்து மோரில் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர நீர்க்கட்டிகள் சரியாகும். இந்த மோரை குடித்த பிறகு அரை மணி நேரம் எதுவும் சாப்பிடக்கூடாது.

கச்சகாயை அரைத்து காலையில் தினமும் சாப்பிட்டு வந்தால் நீர்க்கட்டிகள் உடைந்து வெளியேறும். மாதவிடாயும் சீராகும்.
வெந்தயத்தை இரவில் ஊற வைத்து காலையில் குடித்து வரலாம்..

பட்டையை வெதுவெதுப்பான தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரலாம்.

காலையில் வெறும் வயிற்றில் 10 துளசியை தண்ணீரில் ஊற வைத்து குடித்து வரலாம். தேனையும் சூடு தண்ணீரில் 2 ஸ்பூன் போட்டு தினமும் குடித்து வரலாம்.

கண்டிப்பாக நீங்கள் நீர்க்கட்டி பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் இவை உதவும்.

மேலும் மருத்துவ செய்திகளை தெரிந்து கொள்ள நமது இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here