Home News கன்னங்கள் பழுக்க அதிபர் அடித்ததில் பாதிக்கப்பட்ட மாணவன் வைத்தியசாலையில்!

கன்னங்கள் பழுக்க அதிபர் அடித்ததில் பாதிக்கப்பட்ட மாணவன் வைத்தியசாலையில்!

11
0

நவலப்பிட்டி பொலிஸ் பிரதேசத்தில் கொத்மலை கல்வி வலயத்தில், பாடசாலை அதிபரால் தாக்கப்பட்டதில் பாதிக்கப்பட்ட மாணவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஹபுகஸ்தலவ வித்யாலயாவின் க.பொ.த உயர்தர வகுப்பு மாணவனான 17 வயதுடைய ஒருவரே பாதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 18ம் திகதி மாணவன் தாக்கப்பட்டுள்ளார்.

சம்பவ தினத்தில் காலை 7.40 மணிக்கு அவர் பாடசாலைக்கு சென்றுள்ளார். இதன்போது, பாடசாலையின் காலைப் பிரார்த்தனை ஆரம்பித்து, கதவுகள் சாத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட மாணவனும், இன்னும் நான்கு மாணவர்களும் தாமதமாக வந்தமையினால் கதவுக்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்தனர்.

அதிபர் அவர்களை அழைத்து, தாமதத்திற்காக காரணத்தை வினவியபோது, அனைவரும் பேருந்தில் வந்ததாகவும், அது தாமதமாகி விட்டதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர். அந்த குழுவிலிருந்த உயர்தர மாணவனின், காதை இழுத்து, இரண்டு கன்னத்திலும் அதிபர் தாக்கியுள்ளார்.

அவரது இரண்டு கன்னங்களும் வீங்கி, காதில் வலியை உணர்ந்துள்ளார். இதையடுத்து வகுப்பு நண்பர்கள் அவருக்கு சித்தாலேப மருந்தை பூசினர்.

வலி, மனஉளைச்சல் காரணமாக அவர் ஆசிரியரின் அனுமதியுடன் வீடு சென்று, பின்னர் பெற்றோரால் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது காதில் தொடர்ந்து இரைச்சல் ஒலிப்பதை போலிருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here