Home News திருவிழா கூட்டத்திற்குள் கொலை வெறியுடன் புகுந்த கார்.. 52 பேர் படுகாயம்.. கைதான வாலிபர் பரபரப்பு...

திருவிழா கூட்டத்திற்குள் கொலை வெறியுடன் புகுந்த கார்.. 52 பேர் படுகாயம்.. கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்.!!

16
0

ஜெர்மனி நாட்டில் உள்ள வடக்கு பகுதியில் அமைந்துள்ளது வோல்க்மார்சன் நகரம். இந்த நகரில் கிறிஸ்துவ பண்டிகையான “ரோஸ் திங்கள்” தினத்தினை முன்னிட்டு பிரம்மாண்டமான திருவிழா நடைபெற்றது.

இந்த திருவிழாவில் சிறுவர்கள், பெரியவர்கள் மற்றும் பெண்கள் என நூற்றுக்கணக்கான மக்கள் வித்தியாசமான வேடத்தில், வண்ண வண்ண உடைகளை உடுத்திக்கொண்டு ஆடிப்பாடி மகிழ்ந்து பேரணியாக சென்று கொண்டு இருந்தனர்.

இந்த நிலையில், அங்குள்ள உள்ளூர் நேரத்தின்படி மதியம் சுமார் 2.45 மணியளவில் அதிவேகமாக வந்த காரொன்று, திருவிழா கூட்டத்திற்குள் புகுந்துள்ளது. இந்த கோர சம்பவத்தில் கூட்டத்தில் இருந்த மக்கள் அங்கும் இங்குமாய் தூக்கி வீசப்பட்டனர்..

இந்த கொடூர தாக்குதலில் 18 சிறுவர்கள் உட்பட 52 பேர் பலத்த காயமடைந்த நிலையில், இது தொடர்பாக தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மக்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், காரின் ஓட்டுனரை கைது செய்து மேற்கொண்ட விசாரணையில், மக்களை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கில் கூட்டத்தினரின் மீது காரை வைத்து மோதியுள்ளது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here