Home Indian news உன் குடும்ப பிரச்சனை சரியாகணுமா?… போலி சாமியாரின் குடும்பி பிடி திட்டம்

உன் குடும்ப பிரச்சனை சரியாகணுமா?… போலி சாமியாரின் குடும்பி பிடி திட்டம்

19
0

கர்நாடக மாநிலத்தில் புள்ள பெங்களூர் ராமமூர்த்தி நகர் பகுதியில் வசித்து வருபவரின் பெயர் கீதா. இவர் ராமமூர்த்தி நகர் காவல் நிலையத்தில் புகரொன்றை அளித்துள்ளார். இது தொடர்பான புகாரில் அவர் தெரிவித்தாவது,

எனது கணவர் உடல்நகுறைவின் காரணமாக கடந்த 2009 ஆம் வருடத்தில் இறந்துவிட்டார். இதன்பின்னர் எனது 3 மகன்களுடன் நான் ராமமூர்த்தி நகரில் தனியாக வசித்து வரும் நிலையில், எனக்கு பெங்களூரில் 7 நிலங்கள் இருந்தது. இதனைப்போன்று கோலார் மாவட்டத்திலும் சொந்தமாக தோட்டமும் இருக்கிறது. இந்த நேரத்தில், எனது உறவினருக்கும் – எனக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டது.

இந்த சமயத்தில், நாகராஜ் என்பவர் எனக்கு அறிமுகமாகி, தன்னை சாமியார் என்று அறிமுகம் செய்து கொண்டார். மேலும், தனது குடும்பத்தில் நிலவி வரும் பிரச்சனைகளை நான் அறிவேன் என்றும், இதனை சரி செய்ய வீட்டில் பூஜை செய்ய வேண்டும் என்றும் கூறினார். இந்த பூஜைக்கு தங்க நகைகளை வைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதன் பேரில் நானும் அவர் கேட்டதையெல்லாம் செய்ய, கடந்த 2016 ஆம் வருடம் முதல் 2019 ஆம் வருடம் வரை பூஜைகளை செய்து கொண்டு வந்தார். பூஜையறையில் அவரின் சொல்லிற்கேற்ப தங்க நகைகளை வைத்தேன். தற்போது வரை சுமார் 3 கிலோ தங்க நகைகளை வைத்துள்ள நிலையில், இதனையும் எடுத்துக்கொண்டு ரூ.5 கொடியும் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி ஏமாற்றிவிட்டார்.

மேலும், எனக்கு சொந்தமாக இருக்கும் நிலத்தை விற்பனை செய்து வேறு இடத்தில் நிலம் வாங்கும் பட்சத்தில் குடும்ப பிரச்சனை தீரும் என்று கூறி நிலத்தை விற்பனை செய்து ரூ.22 கோடி கொடுத்தும் பிரச்சனை தீர்ந்தபாடில்லை.

இதன்பின் சந்தேகம் கொண்டு நான் கொடுத்த பணம் மற்றும் நகையை திருப்பி கேட்டால், எனக்கு கொலை மிரட்டல் விடுத்து, எனது மகன்களின் மீது பேய்களை ஏவி விடுவதாக மிரட்டி வருகிறார் என்று கூறியுள்ளார். இதனையடுத்து இது தொடர்பான புகாரை ஏற்ற காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து நாகராஜை கைது செய்தனர். பின்னர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here