Home Local news தோட்டத்து இளைஞர்களை துப்பாக்கியால் மிரட்டிய தொண்டமானின் மகன்..! கொதிதெழுந்த மக்கள்

தோட்டத்து இளைஞர்களை துப்பாக்கியால் மிரட்டிய தொண்டமானின் மகன்..! கொதிதெழுந்த மக்கள்

15
0

கினிகத்தேன, தியகல பகுதிக்கு நேற்றிரவு படை பட்டாளத்தோடு விரைந்த ஜீவன் தொண்டமான், அப்பகுதியிலுள்ள இளைஞர்களை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியுள்ளார் என்றும், இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் இளைஞர் ஒருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார் என்றும் மக்கள் தெரிவித்தனர்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி தலைவரின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டம் ஒன்றும் நடந்துள்ளது.

தியகல பகுதியிலுள்ள மைதானமொன்றை புனரமைத்துதருமாறு முத்தையா முரளிதரனின் தம்பியான, முத்தையா பிரபாகரனிடம் (பிரபு) தோட்ட இளைஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு பிரபுவும் நேசக்கரம் நீட்டினார். இதனையடுத்து தோட்ட இளைஞர்கள் தீயாக வேலைகளை முன்னெடுத்தனர்.

இந்நிலையிலேயே பெரும் குழுவொன்றுடன் நேற்றிரவு தியகல சென்று, இளைஞர்களை ஜீவன் தொண்டமான் மிரட்டியுள்ளார் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. துப்பாக்கியை காட்டி மிரட்டினார் என்றே பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here