Home Indian news தூங்கிக்கொண்டு இருந்த மூதாட்டியை அடித்தே கொலை செய்த வடமாநில சைக்கோ வாலிபன்.. புதுவையில் பேரதிர்ச்சி.!

தூங்கிக்கொண்டு இருந்த மூதாட்டியை அடித்தே கொலை செய்த வடமாநில சைக்கோ வாலிபன்.. புதுவையில் பேரதிர்ச்சி.!

14
0

புதுச்சேரி மாநிலத்தை அடுத்துள்ள தமிழக பகுதி திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு சேதாரப்பட்டு பகுதியை சார்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவியின் பெயர் அங்கம்மாள் (வயது 75). லட்சுமணன் கடந்த சில வருடத்திற்கு முன்னதாக உயிரிழந்த நிலையில், அங்கம்மாள் தனது மகன் முனுசாமியின் இல்லத்தில் இருந்து வந்துள்ளார். இந்த தருணத்தில், கடந்த சில மதத்திற்கு முன்னதாக முனுசாமியும் இறந்துள்ளார்.

இதனையடுத்து அங்கம்மாள் தினமும் இரவு வேலையில் வீட்டிற்கு அருகேயுள்ள கடை வாயிலில் உறங்கி வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்னதாக இரவு தூங்கிக்கொண்டு இருந்த அங்கம்மாளுக்கு அருகே வாலிபர் ஒருவர் அமர்ந்திருந்த நிலையில், பதறியபடி எழுந்த அங்கம்மாள் திருடன் என்று நினைத்து அங்கிருந்து செல்ல கோரி கூறியுள்ளார்.

இதன் காரணமாக ஆத்திரமடைந்த வாலிபன் அருகில் இருந்த மரக்கட்டையை எடுத்து அங்கம்மாளை சரமாரியாக அடித்து தாக்கிய நிலையில், வலி தாங்க இயலாத அங்கம்மாள் அலறியுள்ளார். இவரின் சத்தம் கேட்டு அதிர்ந்து போன கூட்டுறவு வங்கி காவலர்கள் விரைந்து வந்து பார்க்கையில், வாலிபன் வெறிபிடித்த நபர் போல அங்கம்மாளை தாக்கியுள்ளான்.

இதனையடுத்து இது தொடர்பாக ஆரோ காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அங்கம்மாளை மீட்டு ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் உயிருக்கு போராடிய அங்கம்மாள் சிகிச்சை பலனின்றி அதிகாலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதன்பின்னர் காவல் துறையினர் இது தொடர்பான வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து வாலிபரிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள கொல்கத்தாவை சார்ந்த டெரிஜெர்மி (வயது 25) என்பதும், இவர் மனநலம் பாதிக்கப்பட்ட சைக்கோ என்பதும் தெரியவந்துள்ளது. இவனும், இவனது தந்தையும் கடந்த மாதத்தின் பொது பணிக்காக அங்குள்ள ஆரோவில் வந்து தங்கியுள்ளனர்.

பின்னர் அங்குள்ள உணவகத்தில் தங்கியிருந்து இருவரும் பணியாற்றி வந்த நிலையில், வாடிக்கையாளரை சரிவர கவனிக்காததால் உணவத்தில் இருந்து பணிநீக்கம் செய்து வெளியேற்றியுள்ளனர். இதன் பின்னர் டெரி ஜெர்மி மனநலம் பாதிக்கப்பட்ட நபரை போல தந்தையிடம் சண்டையிட்டு வந்ததாகவும், தந்தையையே கொலை செய்ய முயற்சித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

உயிருக்கு பயந்து போன டெரி ஜெர்மியின் தந்தை மைக்கேல் ஊருக்கு சென்றுவிடவே, டெரி ஜெர்மி மட்டும் அங்குள்ள பகுதிகளில் சுற்றி திரிந்து வந்துள்ளான். சம்பவத்தன்று இரவு நேரத்தில் டெரி ஜெர்மி ஆரோவில் இருந்து அங்குள்ள திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டிற்கு சென்ற சமயத்தில், மூதாட்டி அங்கம்மாள் திட்டியுள்ளார். இதனால் அவரை மரக்கட்டையால் அடித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. தற்போது டெரி ஜெர்மி கடலூர் சிறையில் உள்ளான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here