Home Health குறைந்த செலவில் கும்மென்று வாழலாம்! எவ்வித நோய்களும் வாராமல் தடுக்க இந்த மூன்றும் போதும்!!

குறைந்த செலவில் கும்மென்று வாழலாம்! எவ்வித நோய்களும் வாராமல் தடுக்க இந்த மூன்றும் போதும்!!

12
0

ஆடாதொடை சிறு செடியாகவும் ஒரு சில இடங்களில் மரமாகவும் காணப்படும். இதன் இலை, மாமர இலை வடிவில் இருக்கும்.

ஆடாதொடை அதிகளவு கரியமில வாயுவை உள்வாங்கி, பிராண வாயுவை வெளியிடுகிறது. இது அதிகளவு ஆக்ஸிஜனை வெளியிடுவதால், இதனை ‘ஆயுள் மூலிகை’ என்றும் அழைக்கின்றனர். இதன் வேர், பட்டை, பூ, இலை அனைத்தும் மருத்துவத் தன்மை கொண்டது.

நெஞ்சில் சளி, அதனுடன் வலி உடலில் தசைப்பகுதிகளில் வலி போன்றவற்றிற்கு ஆடாதொடை இலையைப் பறித்து காயவைத்து பொடியாக்கி கஷாயம் செய்து கொடுப்பார்கள். இது சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது. நுரையீரலைப் பலப்படுத்த ஆடாதோடை சிறந்த மருந்தாக உள்ளது. இது நுரையீரல் காற்றுச் சிற்றறைகளில் உள்ள சளியை நீக்கி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

ஆடாதோடை இலை, தூதுவளை இலை சம அளவு எடுத்து காயவைத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் காலை, மாலை வேளைகளில் தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் அனைத்தும் நீங்கும்.

சளித் தொல்லை அணுகாது. நுரையீரல் பலம் பெறும். ரத்த நாளங்களில் உள்ள சளியை நீக்கி ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். ரத்தத்தில் உள்ள தேவையற்ற உப்பு, கொழுப்பு போன்றவற்றை மாற்றும் தன்மை ஆடாதோடைக்கு உண்டு.

ஆடாதோடை இலையை நிழலில் உலர்த்திப் பொடித்து வைத்து தினமும் காலை வேலையில் 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், சளி, இருமல், இரைப்பு, நீங்கும். நெஞ்சுச் சளியைப் போக்கி உடலை சீரான நிலையில் வைத்துக்கொள்ளும்.

இதில் பச்சயம் அதிகமாக இருப்பதால் நெஞ்சுச்சளி, இருமல் போன்றவற்றை உடனே மாற்றும். குத்து இருமல் தொண்டைக்கட்டு போன்றவையும் நீங்கும்.

ஆடாதொடை கஷாயம் :- தேவையானவை:

ஆடாதொடை இலைகள்- 10, சுக்கு – 10 கிராம், மிளகு – 10 கிராம், கிராம்பு (லவங்கம்) – 5 கிராம்

செய்முறை:

ஆடாதொடை இலைகள், சுக்கு, மிளகு, கிராம்பு நான்கையும் சேர்த்து தண்ணீர் விட்டு அந்த தண்ணீர் நான்கில் ஒரு பங்காகும்வரை காய்ச்சி வடிகட்டிக் குடிக்கலாம்.

பலன்கள்: தொண்டைக் கரகரப்பு, மார்புச் சளி, மூச்சிரைப்பு (wheezing ) ஆகிய பிரச்னைகளுக்கு நல்ல பலன் தரும்.

கற்பூர வள்ளி – வெற்றிலை கஷாயம்:- தேவையானவை:

கற்பூரவள்ளி இலை- 4, வெற்றிலை – 4 , தூதுவளை இலை- 2 , சுக்கு, மிளகு – சிறிதளவு

செய்முறை:

கற்பூரவள்ளி, வெற்றிலை, தூதுவளை ஆகியவற்றுடன் மையாக அரைத்த சுக்கு, மிளகைச் சேர்த்துக் கொதிக்கவைத்துப் பருகலாம். குழந்தைகளுக்கு கொடுக்கும்போது கஷாயத்துடன் தேன் சேர்த்துக் கொடுக்கலாம்.

பலன்கள்: தலைபாரம், தும்மல், டிஹைட்ரேஷன் போன்ற பிரச்னைகளுக்கு நலன் பலனளிக்கும்.

கபசுர கஷாயம்:- தேவையானவை:

சுக்கு, திப்பிலி, லவங்கம், சிறுகஞ்சொறி வேர், அக்ரகாரம், முள்ளிவேர், கடுக்காய்த் தோல், ஆடாதொடை, கற்பூரவள்ளி, கோஷ்டம், சீந்தில்கொடி,
சிறுதேக்கு (கண்டு பரங்கி), நிலவேம்பு, வட்டத்திருப்பி, முத்தக்காசு.
(இந்தப் பொருள்கள் அனைத்தும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்)

செய்முறை:

இந்தப் பொருள்கள் அனைத்தையும் சம அளவு எடுத்துக்கொண்டு அதனுடன் நீர் சேர்த்து நான்கில் ஒரு பங்காகும்வரை காய்ச்சி வடிகட்டிக் குடிக்கலாம்.

பலன்கள்: மழைக்காலங்களில் வரும் எல்லாவிதமான வைரஸ் காய்ச்சல்களை தடுக்கவும், வந்தால் குணமாக்கவும் இந்தக் கஷாயம் உதவும்.

கவனம்: மேற்கண்ட கஷாயங்களை 15 வயதுக்குட்பட்டவர்கள் 30 மி.லியும், பெரியவர்கள் 60 மி.லியும், காலை, மாலை இருவேளைக்கு மூன்று நாள்கள் குடிக்கலாம். சளி, காய்ச்சல் கண்டவர்கள் சுயமாக இந்த கஷாயத்தை எடுத்துக்கொள்ளாமல் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here