Home Fashion ஐ.பி.எல் தொடக்க ஆட்டங்களில் லசித் மலிங்க இல்லை!

ஐ.பி.எல் தொடக்க ஆட்டங்களில் லசித் மலிங்க இல்லை!

248
0

ஐ.பி.எல் 2020 தொடரின் தொடக்க போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடும் லசித் மலிங்க பங்கெடுக்க மாட்டார். ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்லும் அணியுடன் அவர் செல்ல மாட்டார்.

மலிங்கவின் தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட வேண்டிய தேவையேற்படலாம். இதன்போது, தான் தந்தையுடன் இருக்க விரும்புவதாக மலிங்க தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் போட்டிகளில் மலிங்க 170 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த ஆண்டு கிண்ணத்தை வெல்வதில் மலிங்க முக்கிய பங்காற்றியிருந்தார். சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசி பந்தில் மும்பை வென்றது.

சிஎஸ்கே இறுதி பந்தில் இரண்டு ஓட்டம் பெற்றால் வெற்றியென்ற நிலையில், கடைசி ஓவரை வீசிக்கொண்டிருந்த மலிங்க, கடைசிப்பந்தில் ஷர்துல் தாக்கூரை எல்.பி.டபிள்யூ அவுட் செய்தார். தனது முதல் மூன்று ஓவர்கள் 42 ரன்களை விட்டுக்கொடுத்த மலிங்கா, ஆட்டத்தின் தீர்க்கமான ஓவரில் ஏழு ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

மார்ச் மாதத்தின் பின்னர் மலிங்க எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் ஆட்டத்திலும் விளையாடவில்லை. ஜூன் மாதத்தில், இலங்கையின் 24 பேர் கொண்ட குழு இரண்டாவது தங்குமிட பயிற்சி முகாமுக்கு அறிவிக்கப்பட்டபோது, ​​மலிங்க இணைக்கப்பட்டிருக்கவில்லை.

ஐ.பி.எல் இன் திருத்தப்பட்ட உத்தியோகபூர்வ அட்டவணை இன்னும் வெளிவரவில்லை என்றாலும், செப்டம்பர் 19 அன்று தொடக்க ஆட்டத்தில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும்- மும்பை இந்தியன்ஸ் அணியும் ஆடக்கூடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here