கம்பஹா – திவுலபிட்டிய பகுதியில், கொ ரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ள பெண்ணின் கணவர் முக்கிய விடயமொன்றை வெளிப்படுத்தியுள்ளார்.

இதன்படி அவர் கொழும்பு ஊடகமொன்றுக்கு குறிப்பிடுகையில், தனது மனைவிக்கு ஆடைத் தொழிற்சாலையைத் தவிர வேறு எந்தவொரு இடத்தில் வைத்தும் கொ ரோனா தொற்று ஏற்படுவதற்கும் வாய்ப்பு இருக்கவில்லை.

எனவே மனைவி பணியாற்றும் தொழிற்சாலைக்குள் வைத்தே அவருக்கு கொ ரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

என்ற போதும் குறித்த 39 வயது பெண்ணுக்கு எவ்வாறு கொ ரோனா தொற்று ஏற்பட்டது என்பது இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் அவரது 16 வயது மகளுக்கும் கொ ரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பெண்ணின் கணவர் மற்றும் ஏனைய மூன்று பிள்ளைகளும் காலி – ஹபராதுவ பொலிஸ் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை, நேற்றைய தினம் 111 பேருக்கு கொ விட் – 19 தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் நாட்டில் கொ ரோனா தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 3513 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here