மட்டக்களப்பில் சிங்களவர்கள் நில ஆ க் கிரமிப்பு நடவடிக்கை மேற்கொள்வதற்கு முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் தமக்கு உதவி செய்ததாக மட்டக்களப்பில் ஆ க் கிரமிப்பை மேற்கொண்டுள்ள சில சிங்கள ஆ க் கிரமிப்பாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை பகுதியான மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை நிலங்களாக காணப்படும் பகுதிகளுக்குள் அம்பாறை மாவட்டத்தில் இருந்து வருகை தந்து அ த் து மீறி நுழைந்துள்ள பௌத்த பிக்கு தலைமையிலான சிலர் அ த் துமீறி காணிகளை பிடித்து துப்பரவு செய்து வருகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக ஆராய்வதற்கு கடந்த 6ம் திகதி மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகங்களின் ஒன்றியம், தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மற்றும் பண்ணையாளர்கள் இணைந்து மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் வலய முகாமையாளர், ஏறாவூர் பற்று ஈரளக்குளம் கிராம சேவையாளர், கரடியனாறு பொலீசார் ஆகியோரை ச ம் பவ இடத்திற்கு சென்று சந்தித்து கலந்துரையாடியதோடு காணி அபகரிப்பில் ஈடுபடும் பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினரையும் சந்தித்து பேசியிருந்தனர்.

இதன் போது அம்பாறை மாவட்டத்தின் தெய்அத்தகண்டிய பிரதேசத்தில் இருந்து வந்த பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினர் 106 குடும்பங்களுக்கு 5 ஏக்கர் காணி வீதம் விவசாய செய்கைக்கு தர வேண்டும் அதுவரை நாங்கள் இந்த இடத்தை விட்டு வெளியேற மாட்டோம் என்று கூறியிருந்தனர்.

இதுபோன்ற தமது ஆ க் கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு 2010ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான காலப்பகுதிகளில் பிரச்சனைகள் எதுவும் இருக்கவில்லை என்றும் சிறிலங்கா ராணுவத்தினரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானும் தமக்கு உதவிகள் செய்ததாகவும் அந்த சிங்கள ஆ க் கிரமிப்பாளர்கள் தெரிவித்தார்கள்.

இது தொடர்பாக அவர்கள் மேலதிகமாகக் கூறிய விடயங்கள் வீடியோவில்:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here