மினுவாங்கொட தொழிற்சாலையில் கொ ரோனா தொற்றுக்குள்ளானதாக கண்டுபிடிக்கப்பட்ட பெண் முதலாவது கொ ரோனா நோயாளி அல்ல என இராணுவ தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

தொழிற்சாலை வைத்திய நிலையத்தின் தகவல்களுக்கு அமைய இந்த பெண்ணுக்கு காணப்பட்ட நோய் அறிகுறிக்கு சமமாக அறிகுறிகள் கொண்ட மேலும் பலர் இதற்கு முன்னர் சிகிச்சை பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மினுவாங்கொட கொ ரோனா கொத்தணி ஏனைய கொத்தணிகளை விடவும் தனித்துவமான மற்றும் குழப்பமானதொன்று என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார்.

இங்கு பணியாற்றும் இளம் வயதினர் அதிகமாக உள்ளனர். அத்துடன் அவர்களுக்கு தெளிவுப்படுத்த முடியாத தனிப்பட்ட தொடர்புகள் பல உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here