சீரியலைப் பொறுத்தவரை பெரும்பாலான நடிகர் நடிகைகள் ஆரம்பத்தில் சினிமாவில் அறிமுகமானவர்கள் தான். இப்போது சீரியலில் இருந்து சினிமாவிற்கு முன்னேறும் நடிகைகளும் வந்து விட்டார்கள். முன்னணி நடிகர்களின் படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகைகள் கூட தற்போது சீரியலில் நடித்து வருகிறார்கள்.

ராதிகா, ரேவதி, ரம்யா கிருஷ்ணன் போன்றவர்கள் ஒருபுறம் சினிமா மறுபுறம் சீரியல் என தங்கள் கரியரை பேலன்ஸ் செய்து வருகிறார்கள். இதற்கிடையே சினிமாவிலிருந்து சின்னத்திரைக்குள் நுழைந்த நடிகை ஸ்வேதா பண்டேகர் இன்று சின்னத்திரை ரசிகர்களிடம் தனக்கென ஓரிடத்தைப் பிடித்துள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும், ’சந்திரலேகா’ என்ற தொடரில் சந்திரா என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான்.சென்னையில் உள்ள பி.எம்.ஆர் கல்லூரியில் பொறியியல் படிப்பை படித்த ஸ்வேதா ஆரம்பத்தில் ஒரு சில விளம்பர படங்களில் நடித்து வந்தார்.

அழகான தோற்றத்தினால் பின்னர் இவருக்கு, சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. 2007 -ஆம் ஆண்டு நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ’ஆழ்வார்’ திரைப்படத்தில் அவரின் தங்கையாக நடித்திருந்தார் ஸ்வேதா.

முதல் படமே அஜித் படம் என்பதால், அடுத்த படத்திலேயே இவருக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2008-ஆம் ஆண்டு சத்யா நடிப்பில் வெளியான ’வள்ளுவன் வாசுகி’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். ’மறுமலர்ச்சி’ படத்தை இயக்கிய பாரதி தான் இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.

ஆனால் இந்தப் படம் எதிர் பார்த்த வெற்றியை தராததால், அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைப்பதில் தாமதமானது.சொப்னா என்ற பெயரை குறும்படத்திற்காக ஸ்வேதா என்று மாற்றிக் கொண்ட அவர், தனது குடும்பப் பெயரான பண்டேகர் என்னும் பெயரை இணைத்து ஸ்வேதா பண்டேகர் என்று மாற்றியிருக்கிறாராம்.

தவிர இன்ஸ்டாகிராமில் வித விதமான படங்களை பதிவிட்டு, ரசிகர்களை என்கேஜ்டாக வைத்திருக்கிறார். அந்த வகையில், ஜீன்ஸ் பேன்ட், சர்ட் சகிதமாக செம்ம ஹா ட்டான சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள் நீங்களா இது.. நம்பவே முடியல என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here