நமது உடல் ஒரு நாளைக்கு இரண்டு வேலை தூங்கும் விதமாகத்தான் படைக்கப்பட்டிருக்கிறது.

இரவில் 6 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும். காலை முதல் மதியம் வரை மூளைக்கு கடுமையான வேலை கொடுக்கும் பொது, சற்று ஆசுவாசப்படுத்திக்கொள்ள மூளையோ, உடலோ தானாக ஒய்வு கேட்கும்.

அந்த நேரத்தில் எல்லாவற்றையும் மறந்து அரை மணி நேரம் குட்டித் தூக்கம் போட்டால், உடலும் மூளையும் மீண்டும் சுறு சுறுப்பாகி விடுகின்றன.

இப்படிப் போடும் பகல் குட்டித்தூக்கம் மூளையின் செயல்பாட்டை அதிகரிப்பதாக கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.

காலையில் நேரமாக எழுந்து உடற்பயிற்சி, யோகாசனங்கள் போன்றவற்றை மேற்கொள்வதன் மூலம், உடலின் ஆரோக்கியம் பல மடங்கு மேம்படும்.

அந்த வாய்ப்பை இழக்காமல் இருக்க இரவில் சீக்கிரம் தூங்கி பகலில் நேரமாக எழுந்து கொள்வது நல்லது.

இரவு நேரம் வெகு நேரம் வரை வேலை செய்வதால் உடல் சூடு அடையும். இதனால் பல்வேறு வியாதிகளைச் சந்திக்க நேரும். குறிப்பாக கண்களும், மூளையும் தாக்கப்படும்.

உடலுக்கு முக்கியமாக தேவைப்படும் விட்டமின் டி சத்தை சூரிய ஒளியில் இருந்து கிடைக்கப்பெற இயலும்.

இவர்கள் காலை நேரத்தில் தூங்குவதால் இளஞ்சூரிய வெயில் உடலில் பட வாய்ப்பு ஏற்படாது. இதனால் இவர்களுக்கு விட்டமின் டி சத்து குறைபாடு ஏற்படும்.

ஆக இயற்கையாக பெற இயலும் ஒரு சத்தை, காலை நேர தூக்கம் கிடைக்காமல் செய்துவிடும்.

தாமதமாக எழும் பொழுது தேவையில்லாத மன அழுத்தங்கள், மனக் குழப்பங்கள் ஏற்படும். ஒரு ஒழுங்கான தூக்க முறையைக் கடைப்பிடிப்பதன் மூலம் இந்த பி ர ச்சனைகளைத் தவிர்க்க முடியும்.

வயிறு நிரம்ப சாப்பிட்டுவிட்டு காலையில் படுக்கவே கூடாது. இதனால் செரிமான பி ர ச் சனை ,உடல் எடை அதிகரித்தல் போன்ற பல பி ர ச் சனைகள் வரலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here