ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த புலம்பெயர்ந்தோர் சென்ற படகு துனிஷிய கடற்பகுதியில் கவிழ்ந்ததில் குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.

ஆப்பிரிக்காவின் பல நாடுகளை சேர்ந்த சிலர் படகு ஒன்றில் புறப்பட்டு கடல்வழி பயணம் மேற்கொண்டனர். அவர்கள் சென்ற படகு துனிஷிய கடற்கரை பகுதியருகே ஸ்பாக்ஸ் நகரில் இருந்து சற்று தொலைவில் வந்தபோது திடீரென கடலில் கவிழ்ந்தது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கடலோர காவல் படையினர் சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் நீரில் மூ ழ் கி உ யி ரிழந்த 11 பேரின் உ ட ல்களை இதுவரை மீட்டுள்ளனர். அவர்களில் 2 பேர் குழந்தைகள். 7 பேரை மீட்பு குழுவினர் உயிருடன் மீட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here