விஜய் சினிமாவில் நடிக்க வந்து கிட்டத்தட்ட 28 வருடங்களாக நிலையில் இதுவரை இந்த மாதிரி ஒரு விஷயம் நடந்தது இல்லை என அவரது ரசிகர்கள் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

விஜய் சினிமாவில் நடிக்க வந்து கிட்டத்தட்ட 28 வருடங்களாக நிலையில் இதுவரை இந்த மாதிரி ஒரு விஷயம் நடந்தது இல்லை என அவரது ரசிகர்கள் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் நம்பர்-1 இடத்தை பிடிப்பதற்கு பல போராட்டங்களை சந்தித்து தற்போது அதில் வெற்றி கண்டுள்ளார். மேலும் நாளுக்கு நாள் இவரது ரசிகர் பட்டாளங்களும் அதிகமாகிக் கொண்டே செல்கின்றனர்.

தமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மற்றும் வட இந்தியாவிலும் விஜய்யின் ரசிகர்கள் பெருமளவில் இருக்கின்றனர். அதற்கு உதாரணமாக பிகில் படத்தின் வசூலை சொல்லலாம்.

விஜய் தன்னுடைய 28 வருட சினிமா வாழ்க்கையில் குறைந்தது வருடத்திற்கு ஒரு படமாக வெளியிட்டு சாதனை படைத்து வந்தார். விஜய்யின் சினிமா கேரியரில் 1996 ஆம் ஆண்டு மட்டும் அதிகபட்சமாக 5 படங்கள் வெளியானது.

இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு தளபதி விஜய்யின் படம் வெளியாகாத ஆண்டாக மாறிவிட்டது. மேலும் அவர் சினிமாவில் நடிக்க வந்து இத்தனை வருடங்கள் ஆன நிலையில் ஒரு வருடத்தில் ஒரு படம் கூட வெளியாகாதது இதுவே முதல் முறை.

இதனால் தளபதி ரசிகர்கள் மட்டுமில்லாமல் தளபதி விஜய்யும் சற்று சங்கடத்தில் இருக்கிறாராம். இதற்கெல்லாம் சேர்த்து வைத்து 2021 ஆம் ஆண்டு இரண்டு படங்களாக வெளியிட உள்ளாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here