நடிகர் விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவின் முன்னனி நடிகராக விளங்குபவர், அதுமட்டுமின்றி மிக சிறந்த நடிகராகவும் வளம் வருபவர்.

இவர் நடிப்பில் சமீபத்தில் OTT-யில் வெளியான திரைப்படம் க.பெ.ரணசிங்கம் சிறந்த விமர்சனங்களை பெற்ற இப்படம் வசூலில் புதிய சாதனைகள் படைத்தது வருகிறது.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி இலங்கை கிரிக்கெட் அணியின் வீரரான முத்தையா முரளிதரன் வாழக்கை வரலாற்று திரைப்படமான 800-ல் நடிக்கவுள்ளார். இப்படம் குறித்து மோஷன் போஸ்ட்டர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் தற்போது நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக #ShameOnVijaySethupathi என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இது குறித்த ஹேஷ்டேக்கில் ரசிகர்கள் ‘ இன ப்ப டுகொ லையில் ஈடுபட்ட இலங்கை ராணுவ வீரர்களின் கோடியை அணிந்து கொண்டு நடிகர் விஜய் சேதுபதி அப்படத்தில் நடிக்க கூடாது’ என பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here